Published:Updated:

``இலங்கைக்கு உதவ முன்வந்திருப்பது உங்களின் நல்லெண்ணத்தை குறிக்கிறது!" - ஸ்டாலினுக்கு ராஜபக்சே நன்றி

ராஜபக்சே - ஸ்டாலின்

"அண்டை நாட்டுப் பிரச்னையாகப் பார்க்காது, மனிதாபிமான அடிப்படையில் நோக்கும் தங்களுக்கு இலங்கை மக்கள் சார்பாக மிகுந்த நன்றி" - மகிந்த ராஜபக்சே

``இலங்கைக்கு உதவ முன்வந்திருப்பது உங்களின் நல்லெண்ணத்தை குறிக்கிறது!" - ஸ்டாலினுக்கு ராஜபக்சே நன்றி

"அண்டை நாட்டுப் பிரச்னையாகப் பார்க்காது, மனிதாபிமான அடிப்படையில் நோக்கும் தங்களுக்கு இலங்கை மக்கள் சார்பாக மிகுந்த நன்றி" - மகிந்த ராஜபக்சே

Published:Updated:
ராஜபக்சே - ஸ்டாலின்

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு உதவ அனுமதிக்கக் கோரி, மத்திய அரசுக்குத் தமிழக முதல்வர் கடிதம் எழுதியிருந்தார். அதையடுத்து, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இதற்கு அனுமதியளித்திருந்தார். இதைத் தொடர்ந்து தமிழக முதல்வர் ஸ்டாலின், ``இலங்கை மக்களுக்கு உதவிட நிதியுதவி வழங்க வேண்டும். 

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

நல்லெண்ணம்கொண்ட அனைவரும் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்யவேண்டிய தருணம் இது. மனிதாபிமான அடிப்படையில் நீங்கள் வழங்கிடும் உதவிகள் இலங்கை மக்களுக்குத் தேவையான பொருள்களாக அனுப்பிவைக்கப்படும்" என்று கூறி, நன்கொடை அனுப்பவேண்டிய விபரங்களையும் வெளியிட்டார். நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்குவோர், 80-G-ன் கீழ் வருமான வரி விலக்கு பெறலாம் என்றும் அறிவித்திருந்தார். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மகிந்த ராஜபக்சே
மகிந்த ராஜபக்சே

இந்த நிலையில், இலங்கைக்கு உதவ முன்வந்துள்ள தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ``தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்டப்பேரவையில் இலங்கைக்கு உதவுவதற்காக தீர்மானம் கொண்டு வந்திருக்கிறார். தற்போது நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி சூழ்நிலையில், கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ள மக்களுக்குத் தமிழ்நாட்டிலிருந்து உணவு, அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் அனுப்பி வைக்கப்படும் என்று தாங்கள் அறிவித்திருப்பது தங்களின் நல்லெண்ணத்தைக் குறிக்கிறது. 

ராஜபக்சே வெளியிட்டுள்ள அறிக்கை
ராஜபக்சே வெளியிட்டுள்ள அறிக்கை

இலங்கை பொருளாதார நெருக்கடியை அண்டை நாட்டுப் பிரச்னையாகப் பார்க்காது, மனிதாபிமான அடிப்படையில் நோக்கும் தங்களுக்கும், தமிழ்நாடு மாநில அரசுக்கும் இலங்கை மக்கள் சார்பாக மிகுந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism