வெள்ளை மாளிகையின் இந்தோ-பசிபிக் ஆலோசகர் அமெரிக்கா உடனான இந்தியாவின் உறவு குறித்து தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய அவர், `` அமெரிக்கா-இந்தியா இடையிலான இருதரப்பு உறவில் எப்போதும் சவால்கள் இருக்கின்றன என்று நான் நினைக்கிறேன். ஆனால் 21-ம் நூற்றாண்டில் இந்தியாவுடனான உறவு அமெரிக்காவுக்கு மிகவும் முக்கியமானது. பாதுகாப்பு விஷயங்களில் மாற்று வழிகளை வழங்குவதில் இந்தியாவுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, இஸ்ரேலுடன் இணைந்து உதவி செய்யும்.

அமெரிக்கா ஒரு 'வலுவான உறவை' கட்டியெழுப்புவதற்காக இந்தியாவுடன் தனிப்பட்ட முறையில் ஈடுபட்டு வருகிறது. ரஷ்யா-உக்ரைன் நெருக்கடியில் இந்தியாவின் நடுநிலையான நிலைப்பாட்டை ஆதரிக்கிறோம். இந்தியாவின் வலுவான உளவுத்துறை, வர்த்தகம், பொருளாதார இணைப்புகளுடனான ஒத்துழைப்பை அமெரிக்கா மேம்படுத்தும்'' என்று தெரிவித்தார்.
