Published:Updated:

உக்ரைன்: அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட ரஷ்யத் தொழிலதிபர்... விஷத் தாக்குதலுக்கு ஆளானாரா?!

ரோமன் அப்ரமோவிச்

ரஷ்யாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ரோமன் அப்ரமோவிச் (Roman Abramovich) என்பவருக்கு விஷம் கொடுக்கப்பட்டதன் மிதமான அறிகுறிகள் தென்பட்டுள்ளதாகத் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன்: அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட ரஷ்யத் தொழிலதிபர்... விஷத் தாக்குதலுக்கு ஆளானாரா?!

ரஷ்யாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ரோமன் அப்ரமோவிச் (Roman Abramovich) என்பவருக்கு விஷம் கொடுக்கப்பட்டதன் மிதமான அறிகுறிகள் தென்பட்டுள்ளதாகத் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

Published:Updated:
ரோமன் அப்ரமோவிச்

ரஷ்யாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ரோமன் அப்ரமோவிச் (Roman abramovich) என்பவருக்கு விஷம் கொடுக்கப்பட்டதன் மிதமான அறிகுறிகள் தென்பட்டுள்ளதாகத் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இவர் ரஷ்யா - உக்ரைன் மோதலில் அமைதியை நிலைநாட்டுவதற்காகத் தொடக்கம் முதலே பல பேச்சுவார்த்தைகளை நடத்திவந்தார். இந்த நிலையில், இந்த மாதத் தொடக்கத்தில் உக்ரைன் தலைநகர் கீவில் நடந்த ஒரு சந்திப்புக்குப் பின்னர், இவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

ரோமன் அப்ரமோவிச்
ரோமன் அப்ரமோவிச்

ரோமன் அப்ரமோவிச்சுடன் சேர்த்து மேலும் இரண்டு மூத்த உக்ரைன் பிரதிநிதிகளுக்கும், அவரைப்போலவே உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. கண்களில் எரிச்சல், நீர் வடிவது, கைகள் மற்றும் முகத்தில் தோல் உரிதல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

மேற்குறிப்பிடப்பட்ட அறிகுறிகள் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட அனைவரும், தற்போது சிகிச்சைக்குப் பிறகு உடல்நலம் தேறிவருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மருத்துவர்கள் இத்தகைய தாக்குதலை `மிதமான விஷத் தாக்குதல்' என்றே கூறுகிறார்கள். ஆனால் இவர்களைக் கொல்வது குறிக்கோளாக இல்லாமல் மிரட்டுவதைப்போல் இந்தச் சம்பவம் அரங்கேறியிருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்தச் சதி சம்பவத்தின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்று இன்னும் கண்டறியப்படவில்லை. இரு நாடுகளிடையேயான பேச்சுவார்த்தைகளைப் பிடிக்காத யாரேனும் இதைச் செய்திருக்கக் கூடும் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ரோமன் அப்ரமோவிச்
ரோமன் அப்ரமோவிச்

ரஷ்யா, உக்ரைன் மீது தனது போர்த் தாக்குதலை பிப்ரவரி மாதம் தொடங்கியது முதலே, ரோமன் அப்ரமோவிச் அமைதியை நிலைநாட்ட உக்ரைனின் பல பகுதிகளில் பலகட்ட பேச்சுவார்த்தைகளை நடத்திவருகிறார். தற்போது உடல்நிலை தேறிய சூழலில், மீண்டும் அப்ரமோவிச் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடத் தொடங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.

ரோமன் அப்ரமோவிச் `செல்சியா எஃப்சி' கால்பந்து கிளப்பை நடத்திவருபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism