Published:Updated:

`இந்தியாவைவிட்டு வெளியேற விரும்பும் செல்வந்தர்கள்’ - காரணம் என்ன?!

பொருளாதாரம்
பொருளாதாரம்

இந்தியாவைப் பொறுத்தவரைய கடந்த 2019-ம் ஆண்டில் மட்டும் 7,000 வசதி படைத்த இந்தியர்கள் வெளிநாடுகளில் குடியேறியிருக்கிறார்கள்.

வளர்ந்த நாடுகள் உட்பட உலக நாடுகள் அனைத்தும் கொரோனா தாக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டன. கொரோனா சூழல் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், மக்கள் அதிலிருந்து மெல்ல மீளத் தொடங்கியிருக்கின்றனர். கொஞ்சம் கொஞ்சமாக தங்களது வழக்கமான வேலைகளில் ஈடுபடத் தொடங்கிவிட்டனர். ஆனால், பொருளாதாரரீதியாகப் பாதிக்கப்பட்ட இந்தியா, அதிலிருந்து மெதுவாக மீண்டுவருகிறது .

ஒருபுறம் கொரோனா தாக்குதல் மக்களை முடக்கிப்போட்டிருந்தாலும், மறுபுறம் வசதி படைத்தவர்களின் சூழல் கட்டுக்குள் வந்த பின்னர் சுற்றுலாவுக்காகவும், வர்த்தகரீதியிலும் வெளிநாடுகளுக்குப் பயணம் செல்லத் தொடங்கினர். இந்தச் சூழலில், இந்தியாவிலுள்ள அதிக அளவிலான பணக்காரர்கள் முதலீடுகள் மூலம் வெளிநாடுகளில் இரட்டைக் குடியுரிமையைப் பெற முயன்றுவருகின்றனர். சமீபத்தில், ஹென்லி நிறுவனம் நடத்திய உலகளாவிய குடியுரிமை குறித்த கணக்கெடுப்பில் இது கடந்த ஆண்டைவிட 62.6 சதவிகிதம் உயர்ந்திருப்பதாகத் தெரிகிறது.

Representational Image
Representational Image

அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் பிற நாட்டவர் முதலீடுகள் மூலம் குடியுரிமை பெறும் முறை கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது. இந்த முறை வெளிநாடுகளில் குடியுரிமை பெற விண்ணப்பித்தவர்களில் இந்தியர்கள் முதலிடத்தைப் பிடித்துள்ளனர். அதேபோல், அமெரிக்காவில் கொரோனா தாக்குதலாலும், அமெரிக்கா அரசியல் களத்தில் ஏற்பட்ட பல்வேறு சலசலப்புகளாலும் அந்நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்ல விரும்பி விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கையில் 2019-ல் ஆறாம் இடத்திலிருந்து இரண்டாவது இடத்துக்கு வந்திருக்கிறது. முந்தைய ஆண்டுகளில் பெரும்பாலானோர் வெளியேறுபவர்களின் விருப்பப் பட்டியலில் பிரிட்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் இருந்துவந்தன. இம்முறை விண்ணப்பித்தவர்களில் அதிகப்படியான மக்கள் கனடா, ஆஸ்திரியா, போர்ச்சுகல் போன்ற நாடுகளுக்குச் செல்லவே விருப்பம் தெரிவித்திருப்பதாக ஹென்லி நிறுவனம் தெரிவித்திருக்கிறது. குறிப்பாக ஆஸ்திரியா நாட்டின் விசாவைக் கொண்டு 187 இடங்களுக்குப் பயணம் செல்ல முடியுமென்று தெரிவித்திருக்கிறார்கள்.

பில்கேட்ஸ் பின்னே, எலான் மஸ்க் முன்னே... பணக்காரர்கள் பட்டியலில் எலான் மஸ்க் உயர்ந்தது எப்படி?

இந்தியாவின் நிலை என்ன?!

2017 – 7,000 பேர் இந்தியாவிருந்து வெளியேறியுள்ளனர்.

2016 – 6,000 பேர் இந்தியாவிருந்து வெளியேறியுள்ளனர்.

2015 – 4,000 பேர் இந்தியாவிருந்து வெளியேறியுள்ளனர்.

இந்தியாவைப் பொறுத்தவரை கடந்த 2019-ம் ஆண்டில் மட்டும் 7,000 வசதி படைத்த இந்தியர்கள் இந்தியாவிலிருந்து வெளியேறி, வெளிநாடுகளில் குடியேறியுள்ளனர். இது, இந்தியாவில் வசித்துவந்த தனிநபர் பணக்காரர்களில் 2 சதவிகிதத்தினர் ஆகும். இதற்கு முன்பு 2015-2017-ம் ஆண்டுகளில் சுமார் 17,000 செல்வந்தர்கள் இந்தியாவிலிருந்து வெளியேறியிருக்கிறார்கள். இதற்கு கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவும், அரசியல் களத்தில் எடுக்கப்பட்டு வரும் முடிவுகளே முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகின்றன.

பணம்
பணம்

குடியுரிமையும் விதிகளும்

முதலீட்டின் மூலம் குடியுரிமையைப் பெறும் முறையானது ஒவ்வொரு நாட்டுக்கும் வேறுபடுகிறது. அந்த வகையில், ஐரோப்பிய நாடுகளில் குடியேற விரும்பும் வெளிநாட்டவர்கள் 3,50,000 யூரோ மதிப்பிலான சொத்துகளை அந்நாட்டிலுள்ள வீட்டுமனைகள் அல்லது நிலங்களின் மீது முதலீடு செய்திருக்க வேண்டுமென்பது விதி.

பிற நாடுகளின் குடியுரிமையைப் பெற விண்ணப்பித்தவர்களின் பட்டியலில் அமெரிக்காவைத் தொடர்ந்து பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, நைஜீரியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்திருக்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு