Published:Updated:

இங்கிலாந்து பிரதமர் தேர்தல் ரேஸ்... முதல் சுற்றில் வென்ற ரிஷி சுனக்! - அடுத்து என்ன?

ரிஷி சுனக் ( ட்விட்டர் )

கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் மற்றும் இங்கிலாந்து பிரதமருக்கான தேர்தல் நடைபெற்றுவருகிறது. இதில், ரிஷி சுனக் முதல் சுற்று வாக்கெடுப்பில் 88 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார்.

இங்கிலாந்து பிரதமர் தேர்தல் ரேஸ்... முதல் சுற்றில் வென்ற ரிஷி சுனக்! - அடுத்து என்ன?

கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் மற்றும் இங்கிலாந்து பிரதமருக்கான தேர்தல் நடைபெற்றுவருகிறது. இதில், ரிஷி சுனக் முதல் சுற்று வாக்கெடுப்பில் 88 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார்.

Published:Updated:
ரிஷி சுனக் ( ட்விட்டர் )

போரிஸ் ஜான்சன் 2019-ம் ஆண்டு பிரிட்டனின் பிரதமராகப் பதவியேற்றதிலிருந்தே அவர்மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துவந்தன. அண்மையில் அவர் அமைச்சரவையிலிருந்து ரிஷி சுனக், சஜித் ஜாவத் உள்ளிட்டோர் போரிஸ் ஜான்சனைக் கண்டித்து தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். அதைத் தொடர்ந்து, கடந்த ஜூலை 7-ம் தேதி, பிரிட்டனின் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்தார் என்ற செய்தி வெளியானது. இந்த நிலையில், பிரிட்டன் பிரதமர் பதவியிலிருந்து தான் விலகுவதாக அறிவித்த போரிஸ் ஜான்சன், புதிய பிரதமர் தேர்வுசெய்யப்படும் வரை இடைக்கால பிரதமராகப் பதவியில் நீடிப்பதாகவும் அறிவித்திருக்கிறார்.

போரிஸ் ஜான்சன்
போரிஸ் ஜான்சன்

அதைத் தொடர்ந்து, கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் மற்றும் இங்கிலாந்து பிரதமருக்கான தேர்தல் நடைபெற்றுவருகிறது. இதில், ரிஷி சுனக் முதல் சுற்று வாக்கெடுப்பில் 88 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார். அவரைத் தொடர்ந்து பென்னி மோர்டான்ட் 67 வாக்குகள் பெற்றும், ட்ரஸ் லிஸ் 50 வாக்குகள் பெற்றும் அடுத்தடுத்த நிலையில் இருக்கின்றனர். முன்னாள் நிதியமைச்சர் நாதிம் ஜஹாவி மற்றும் முன்னாள் கேபினட் அமைச்சர் ஜெர்மி ஹன்ட் ஆகியோர் தோல்வியுற்று போட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதன் இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ரிஷி சுனக்
ரிஷி சுனக்
ட்விட்டர்

இந்தத் தேர்தலில் அடுத்த வார இறுதிக்குள் களம் இரண்டாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, பின்னர் 1,60,000 டோரி உறுப்பினர்கள் அடுத்த கட்சித் தலைவர் மற்றும் பிரதமராக எந்த வேட்பாளராக வர வேண்டும் என்று முடிவுசெய்வார்கள். இந்தத் தேர்தல் முடிவுகள் செப்டம்பர் 5-ம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தேர்தலில் முன்னிலையில் உள்ள ரிஷி சுனக் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.