Published:Updated:

இறுதிச்சுற்றில் ரிஷி சுனக் - இந்தியாவிலும் எதிர்பார்ப்பை எகிறவைக்கும் இங்கிலாந்து பிரதமர் தேர்தல்

ரிஷி சுனக் ( ட்விட்டர் )

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்கள் வழங்கிய 137 வாக்குகளுடன், இறுதிக்கட்ட வாக்குப்பதிவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாகவும், புதிய பிரதமர் தேர்வுசெய்யப்படும் வரை இடைக்கால பிரதமராகப் பதவியில் நீடிப்பதாகவும் அறிவித்திருந்தார். அதிலிருந்து இங்கிலாந்து அரசியல் களத்தில் பரபரப்பு உச்சத்தை எட்டியிருக்கிறது. இந்த நிலையில், கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் மற்றும் இங்கிலாந்து பிரதமருக்கான தேர்தல் நடைமுறைகள் தொடங்கியது. இதில் ஆரம்பத்திலிருந்தே முன்னணியில் இருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்கள் வழங்கிய 137 வாக்குகளுடன், இறுதிக்கட்ட வாக்குப்பதிவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இவருக்குப் போட்டியாக லிஸ் டிரஸ் களத்தில் இருக்கிறார்.

இந்திய வம்சாவளி ரிஷி சுனக் எம்.பி - இங்கிலாந்து
இந்திய வம்சாவளி ரிஷி சுனக் எம்.பி - இங்கிலாந்து
twitter

இந்தத் தேர்தலில் இருவருக்கும் கடும் போட்டி நிலவிவரும் நிலையில், இங்கிலாந்து நாட்டின் ஊடகம் நடத்திய ஆய்வில், லிஸ் டிரஸ், ரிஷி சுனக்குக்கு கடுமையான போட்டியாளராகக் கருதப்படுகிறார். இந்த நிலையில், தேர்தலின் இறுதி வாக்குப்பதிவுதான் பிரதமரைத் தீர்மானிக்கும் தேர்தல். அதில் 1,60,000 டோரி உறுப்பினர்கள் அடுத்த கட்சித் தலைவர் மற்றும் பிரதமராக எந்த வேட்பாளர் வர வேண்டும் என்று முடிவுசெய்வார்கள். இந்தத் தேர்தல் முடிவுகள் செப்டம்பர் 5-ம் தேதி அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இங்கிலாந்து மற்றும் இந்திய மக்களிடம் இந்தத் தேர்தல் முடிவு குறித்து தீவிர எதிர்பார்ப்பு அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!