Published:Updated:

இங்கிலாந்து பிரதமர் தேர்தல்: தொடர்ந்து முன்னிலையில் ரிஷி சுனக் - தற்போதைய நிலவரம் என்ன?

ரிஷி சுனக் ( ட்விட்டர் )

ரிஷி சுனக் முதல் சுற்றைத் தொடர்ந்து இரண்டாம் சுற்றிலும் 101 வாக்குகள் பெற்று வெற்றியாளராக முன்னிலையில் தொடர்கிறார்.

இங்கிலாந்து பிரதமர் தேர்தல்: தொடர்ந்து முன்னிலையில் ரிஷி சுனக் - தற்போதைய நிலவரம் என்ன?

ரிஷி சுனக் முதல் சுற்றைத் தொடர்ந்து இரண்டாம் சுற்றிலும் 101 வாக்குகள் பெற்று வெற்றியாளராக முன்னிலையில் தொடர்கிறார்.

Published:Updated:
ரிஷி சுனக் ( ட்விட்டர் )

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாகவும், புதிய பிரதமர் தேர்வுசெய்யப்படும் வரை இடைக்கால பிரதமராகப் பதவியில் நீடிப்பதாகவும் அறிவித்திருந்தார். அதிலிருந்து இங்கிலாந்து அரசியல் களத்தில் பரபரப்பு உச்சத்தை எட்டியிருக்கிறது. இந்த நிலையில், கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் மற்றும் இங்கிலாந்து பிரதமருக்கான தேர்தல் நடைபெற்றுவருகிறது.

இந்தத் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் முதல் சுற்று வாக்கெடுப்பில் 88 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார். அதைத் தொடர்ந்து இரண்டாம் கட்டத் தேர்தல் நேற்று நடைபெற்றது. அதிலும் ரிஷி சுனக் தொடர்ந்து 101 வாக்குகள் பெற்று வெற்றியாளராக முன்னிலையில் தொடர்கிறார். அவரைத் தொடர்ந்து, வர்த்தக அமைச்சர் பென்னி மோர்டான்ட் 83 வாக்குகளும், வெளியுறவுச் செயலர் லிஸ் ட்ரஸ் 64 வாக்குகளும், முன்னாள் அமைச்சர் கெமி படேனோக் 49 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

ரிஷி சுனக்
ரிஷி சுனக்
ட்விட்டர்

இந்த நிலையில், ரிஷி சுனக் ட்விட்டர் பக்கத்தில் தனது ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவித்து, ``என்னிடமுள்ள அனைத்தையும் நம் தேசத்துக்கு வழங்கத் தயாராக இருக்கிறேன். நாம் ஒன்றாக நமது நம்பிக்கையை மீட்டெடுக்கலாம், நமது பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பி நாட்டை மீண்டும் ஒன்றிணைக்கலாம்" எனப் பதிவிட்டிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்தத் தேர்தல் களம் அடுத்த வார இறுதிக்குள் இரண்டு வேட்பாளர்கள் என்றளவில் இறுதிசெய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, பின்னர் 1,60,000 டோரி உறுப்பினர்கள் அடுத்த கட்சித் தலைவர் மற்றும் பிரதமராக எந்த வேட்பாளர் வர வேண்டும் என்று முடிவுசெய்வார்கள். இந்தத் தேர்தல் முடிவுகள் செப்டம்பர் 5-ம் தேதி அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.