Published:Updated:

திருநங்கைகள் பெண்களா..? - சர்ச்சைக்குள்ளான ரிஷி சுனக்கின் பேச்சு: பின்னணி என்ன?

இங்கிலாந்தின் 57வது பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பதவி ஏற்றுள்ளார். இந்நிலையில் திருநங்கைகள் குறித்து இவர் பேசிய வீடியோ ஒன்று தற்போது பேசுபொருளாகியுள்ளது.

இங்கிலாந்தின் 57வது பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பதவி ஏற்றுள்ளார். இந்நிலையில் இவர் பேசிய பழைய வீடியோ ஒன்று தற்போது பேசுபொருளாகியுள்ளது. 

திருநங்கைகள் பெண்களா..? - சர்ச்சைக்குள்ளான ரிஷி சுனக்கின் பேச்சு: பின்னணி என்ன?
pixabay

டாக் டிவி (TalkTv) இன்டர்வியூவில் ஆகஸ்ட் 25-ம் தேதி பேசிய ரிஷி சுனக்கிடம், `யெஸ் ஆர் நோ’ கேள்விகள் கேட்கப்பட்டன. அதில் `திருநங்கைகள் பெண்களா’ என்ற ஒரு கேள்வி ரிஷி சுனக்கிடம் எழுப்பப்பட்டது. அதற்குப் பதில் அளித்த ரிஷி சுனக் `இல்லை’ என்று பதில் அளித்துள்ளார். 

அதேபோல் ஏப்ரல் 27-ம் தேதி அன்று மம்ஸ்நெட் (Mumsnet) என்ற மற்றொரு யூடியூபில் பேசியவர், ``மக்களின் கருத்துகளை இரக்கத்தோடும், மரியாதையோடும் அணுகுவது முக்கியம். அதேசமயம் கழிவறை மற்றும் விளையாட்டுகள் குறித்த கேள்விகளை எதிர்கொள்ளும்போது, உயிரியலே முக்கியமானது, அடிப்படையுமானது, அந்த வகையான கேள்விகளை நாம் எப்படி அணுகுகிறோம் என்பது முக்கியம்’’ எனக் கூறியுள்ளார். 

இவரின் எதிர்மறையான பதிலுக்கு, LGBTQ+ சமூகத்தின் மீதான இவரின் பார்வைக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. 

`திருநங்கைகள் உண்மையான பெண்கள் அல்ல; ஆனால் அவர்கள் மதிக்கப்பட வேண்டும்' என்று திருநங்கைகள் மீதான வெறுப்பை வெளிப்படுத்தும் வகையிலான கூற்றைச் சொல்லி இருப்பது விமர்சனத்துக்குரியது எனப் பலரும் தங்கள் எதிர்ப்புகளைப் பதிவு செய்து வருகின்றனர்.