உக்ரைன் மீது ரஷ்யா கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாகத் தீவிர தாக்குதல் நடத்திவருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து உள்ளிட்ட சில நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்துவருகின்றன. இதனால் ரஷ்யா கடும் நெருக்கடிகளைச் சந்தித்துவருகிறது.

இந்த நிலையில், அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளுக்குப் பதிலடி கொடுக்கும்விதமாக, ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், ``அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், அமெரிக்க பாதுகாப்புத்துறைச் செயலாளர் லாயட் ஆஸ்டின், ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளரான ஹிலாரி கிளிண்டன், கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்ட சில முக்கியமான நபர்கள் ரஷ்யாவுக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய அதிபர் புதினை போர்க் குற்றவாளியாக அறிவித்து அமெரிக்க நாடாளுமன்ற செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.