Published:Updated:

மார்க் ஜுக்கர்பெர்க்கின் Meta-வை தீவிரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்த்த ரஷ்யா! - என்ன காரணம்?

மார்க் ஜுக்கர்பெர்க்கிற்குச்(Mark Zuckerberg) சொந்தமான சமூக ஊடகதளம் மெட்டா, தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதாக மாஸ்கோ நீதிமன்றம் குற்றம்சாட்டியிருக்கிறது.

மார்க் ஜுக்கர்பெர்க்கின் Meta-வை தீவிரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்த்த ரஷ்யா! - என்ன காரணம்?

மார்க் ஜுக்கர்பெர்க்கிற்குச்(Mark Zuckerberg) சொந்தமான சமூக ஊடகதளம் மெட்டா, தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதாக மாஸ்கோ நீதிமன்றம் குற்றம்சாட்டியிருக்கிறது.

Published:Updated:

உக்ரைனுடன் கடந்த 7 மாதங்களுக்கு மேலாக ரஷ்யா நடத்திவரும் போரில், அவ்வப்போது உக்ரைனுக்கு ஆதரவாகவும், ரஷ்யாவுக்கு எதிராகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன. இதனால் ரஷ்ய அரசு கடந்த மார்ச் மாதத்திலேயே, தங்கள் நாட்டுக்கு எதிராக அவதூறு செய்திகள் பரப்புவதாக, 'Fake News Law' எனும் சட்டத்தை அமல்படுத்தி, ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களுக்குத் தடைவிதித்தது.

Meta
Meta

இந்த நிலையில், சமூக ஊடக நிறுவனமான மெட்டா -வை(meta) பயங்கரவாத மற்றும் தீவிரவாத அமைப்புகளின் பட்டியலில் ரஷ்யா சேர்த்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இது தொடர்பாக ஆங்கில ஊடகத்தில் வெளியான தகவலின்படி, உக்ரைனிலுள்ள சமூக ஊடகப் பயனர்கள் ரஷ்யர்களுக்கு எதிரான வன்முறையை ஊக்குவிக்கும் உள்ளடக்கத்தைப் பதிவிட அனுமதிப்பதாகக் கூறி, மார்க் ஜுக்கர்பெர்க்கிற்குச்(Mark Zuckerberg) சொந்தமான சமூக ஊடகதளம் மெட்டா, தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதாக மாஸ்கோ நீதிமன்றம் குற்றம்சாட்டியிருக்கிறது.

மாஸ்கோ நீதிமன்றம் குற்றச்சாட்டு
மாஸ்கோ நீதிமன்றம் குற்றச்சாட்டு

ஆனால், மாஸ்கோ நீதிமன்றத்தின் இந்தக் குற்றச்சாட்டை நிராகரித்த மெட்டா தரப்பு வழக்கறிஞர், ``இந்த அமைப்பு ஒருபோதும் தீவிரவாத செயல்களில் ஈடுபடவில்லை. மேலும் இந்த அமைப்பு, ரஷ்யாமீது தீவிரமான மற்றும் பகுத்தறிவற்ற வெறுப்பு எனக் கூறப்படும் ரஸ்ஸோபோபியாவுக்கு(Russophobia) எதிரானது" எனக் கூறியதாகச் சொல்லப்படுகிறது.