உக்ரைன், நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ரஷ்யா கடந்த மாதம் (பிப்ரவரி) 24-ம் தேதி முதல் உக்ரைன் மீது ராணுவத் தாக்குதல்களை நடத்திவருகிறது. அதனால், உக்ரைனில் வசிக்கும் மக்கள், வெளிநாட்டு மாணவர்கள் என அனைவரும் பாதுகாப்பான இடங்களை நோக்கி இடம்பெயர்ந்துவருகின்றனர். முன்னதாக, மரியுபோல் நகர மக்களை ரஷ்யா படைகள் தங்கள் நாட்டிற்குக் கடத்திச் செல்வதாக உக்ரைன் குற்றம்சாட்டியிருந்தது.

இந்த நிலையில் உக்ரைன் வெளியுறவு அமைச்சகம், ``ரஷ்யாவின் கட்டுப்பாட்டிலுள்ள டான்பாஸ் பகுதியிலிருந்து 2,389 குழந்தைகள் ரஷ்யாவுக்கு சட்டவிரோதமாக நாடு கடத்தப்பட்டனர். அவர்கள் தற்போது புதினின் கட்டுப்பாட்டில் உள்ளனர்" என்று குற்றம்சாட்டியிருக்கிறது.
2014-ம் ஆண்டு ரஷ்யா-உக்ரைன் இடையே நடந்த போருக்குப் பிறகு டான்பாஸ் பகுதி ரஷ்யாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்ததாக அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.