Published:Updated:

``ரஷ்யா எங்கள்மீது நாளை போர் தொடுக்கலாம் எனத் தகவல் கிடைத்துள்ளது!" - உக்ரைன் அதிபர்

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி

ரஷ்யா தங்கள் நாட்டின்மீது நாளை போர் தொடுக்கலாம் என உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்திருக்கிறார்.

``ரஷ்யா எங்கள்மீது நாளை போர் தொடுக்கலாம் எனத் தகவல் கிடைத்துள்ளது!" - உக்ரைன் அதிபர்

ரஷ்யா தங்கள் நாட்டின்மீது நாளை போர் தொடுக்கலாம் என உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி

உக்ரைன் எல்லையில் கடந்த சில நாள்களாகவே போர்ப் பதற்றம் நிலவிவருகிறது. அதனால், இந்த விவகாரம் உலக அளவில் அனைவராலும் உற்றுநோக்கப்பட்டுவருகிறது. இந்த நிலையில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தனது முகநூல் பக்கத்தில் உக்ரைன்மீது ரஷ்யா நாளை (பிப்.16) தாக்குதல் நடத்தவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா - உக்ரைன்
ரஷ்யா - உக்ரைன்

உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கு எல்லைக்கு அருகில் ரஷ்ய ராணுவம் சுமார் ஒரு லட்சம் தரைப்படைகளையும், போர் தளவாடங்களையும் நிறுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அந்தப் பகுதியில் போர்ப் பதற்றம் அதிகரித்துக் காணப்படுகிறது. இந்த நிலையில், ரஷ்யாவின் ராணுவச் செயல்பாடுகள் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆகியோர் விவாதித்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ரஷ்யா தங்கள் நாட்டின் மீது நாளை தாக்குதல் நடத்தக்கூடும் என உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். அதனால் இந்தியா, ஆஸ்திரேலியா, இத்தாலி, இஸ்ரேல், நெதர்லாந்து, ஜப்பான் உள்ளிட்ட 10 நாடுகள் தங்கள் மக்களை உக்ரைனிலிருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளைத் தொடங்கியிருக்கின்றன.