Published:Updated:

1,000 அமெரிக்கர்கள் ரஷ்யாவில் நுழைய நிரந்தர தடை! - ஆனால், இவருக்கு மட்டும் அனுமதி... யார் தெரியுமா?

ரஷ்யா - உக்ரைன்

ரஷ்ய அதிபர் புதின் உக்ரைனுக்கான ஆதரவை அமெரிக்கா இரட்டிப்பாக்குவதால், கிட்டத்தட்ட 1,000 அமெரிக்க குடிமக்கள் ரஷ்யாவுக்குள் நுழைவதை நிரந்தரமாக தடை செய்திருக்கிறார்.

1,000 அமெரிக்கர்கள் ரஷ்யாவில் நுழைய நிரந்தர தடை! - ஆனால், இவருக்கு மட்டும் அனுமதி... யார் தெரியுமா?

ரஷ்ய அதிபர் புதின் உக்ரைனுக்கான ஆதரவை அமெரிக்கா இரட்டிப்பாக்குவதால், கிட்டத்தட்ட 1,000 அமெரிக்க குடிமக்கள் ரஷ்யாவுக்குள் நுழைவதை நிரந்தரமாக தடை செய்திருக்கிறார்.

Published:Updated:
ரஷ்யா - உக்ரைன்

ரஷ்ய அதிபர் புதின் உத்தரவின்பேரில், கடந்த பிப்ரவரி 24-ம் தேதி உக்ரைனில் ரஷ்யப் படையினர் போரைத் தொடங்கினர். ரஷ்யாவின் இந்த போர் நடவடிக்கையை மேற்குலக நாடுகள் பலவும் கண்டித்து வந்தாலும், போரை முடித்துவைப்பதற்கான அறிகுறிகள் ஏதும் ரஷ்யாவிடமிருந்து தென்படாதபடியே இருக்கின்றன. இந்த நிலையில், ரஷ்ய அதிபர் புதின் உக்ரைனுக்கான ஆதரவை அமெரிக்கா இரட்டிப்பாக்குவதால், கிட்டத்தட்ட 1,000 அமெரிக்க குடிமக்கள் ரஷ்யாவுக்குள் நுழைவதை நிரந்தரமாக தடை செய்திருக்கிறார்.

ரஷ்யா - உக்ரைன் போர்
ரஷ்யா - உக்ரைன் போர்

புதினின் இந்தத் தடைப் பட்டியலில் அமெரிக்க துணைத் தலைவர் கமலா ஹாரிஸ், வெள்ளை மாளிகையின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி, அமெரிக்க போக்குவரத்துச் செயலர் பீட் புட்டிகீக் பெயர்கள் இடம்பெற்றிருக்கின்றன. அதேபோல, நியூயார்க் டைம்ஸின் பிரட் ஸ்டீபன்ஸ், தி நியூயார்க்கரின் சூசன் கிளாசர், ஜார்ஜ் ஸ்டீபனோபுலோஸ், ஏ.பி.சி-யின் உள்ளிட்ட அமெரிக்க செய்தி நிறுவனங்கள் மற்றும் அவற்றின் செய்தியாளர்களுக்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

மேலும், அமெரிக்க்காவின் மார்ஜோரி டெய்லர் கிரீன் (G.A), மாட் கேட்ஸ் (F.L) உள்ளிட்ட குடியரசுக் கட்சியினரையும், அமிக்ளோபுச்சார் (M.N), அலெக்ஸாண்டிரியா ஒகாசியோ-கோர்டெஸ் (N.Y) உள்ளிட்ட ஜனநாயகக் கட்சியினரையும் சேர்த்து இந்தப் பட்டியல் நீள்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஜோ பைடன் - கமலா ஹாரிஸ்
ஜோ பைடன் - கமலா ஹாரிஸ்

ரஷ்ய அரசின் இந்தப் பட்டியலில் ஹாலிவுட் பிரபலம் மோர்கன் ஃப்ரீமேன், இறந்துவிட்ட செனட்டர் ஜான் மெக்கெய்ன் (R-AZ) ஆகியோர் பெயர்களும் இடம்பெற்றிருப்பதும், அமெரிக்காவின் ஃபாக்ஸ் நியூஸ் பத்திரிகையாளர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆகியோரின் பெயர்கள் சேர்க்கப்படவில்லை என்பது சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மார்ச் மாதமே தடை செய்யப்பட்டபட்டியலில் அமெரிக்க ஜனாதிபதி பிடன், வெளியுறவு செயலாளர் ஆண்டனி பிளிங்கன் மற்றும் பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் ஆகியோர் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடதக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism