உக்ரைன் மீது இரண்டாவது நாளாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ரஷ்ய படைகள் உக்ரைன் தலைநகர் கீவை நோக்கித் தாக்குதலை நடத்த ஆரம்பித்துள்ளன. இதனால் அங்கிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் வேறு நாடுகளுக்கு கூட்டம் கூட்டமாக குடிபெயர்ந்து வருகின்றனர். ரஷ்யாவின் இந்த செயலுக்கு உலக நாடுகள் மட்டுமல்லாமல் ரஷ்ய மக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், `` உக்ரைன் ராணுவம் தாக்குதலை நிறுத்தினால் நாங்கள் பேச்சுவார்த்தைக்குத் தயார். உக்ரைனை ஒடுக்குமுறையிலிருந்து விடுவிக்கவே ரஷ்யா விரும்புகிறது. உக்ரைன் அரசு, நடுநிலை குறித்து விவாதிக்கத் தயாராக இருப்பதாகக் கூறுவது பொய்'' என்றார்.
ஐ.நா பாதுகாப்புக் கவுன்சிலில் முன்வைக்கப்படும் தீர்மானங்களில், இந்தியாவின் ஆதரவு தங்களுக்கு இருக்க வேண்டும் என ரஷ்யா கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
