Published:Updated:

``எதிரிகள் இனி இரு முறை யோசித்துவிட்டு மோதுங்கள்” -சக்திவாய்ந்த ஏவுகணை வெற்றி... எச்சரிக்கும் புதின்

கண்டம்விட்டு கண்டம் பாயும் `சர்மட்' ஏவுகணை- ரஷ்யா வெற்றி

உக்ரைன் போரில் ரஷ்யாவை உலக நாடுகள் பலவும் எதிர்த்துவரும் வேளையில், `சர்மாட்' எனும் கண்டம்விட்டு கண்டம் பாயும் புதிய ஏவுகணையை, ரஷ்யா வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது.

``எதிரிகள் இனி இரு முறை யோசித்துவிட்டு மோதுங்கள்” -சக்திவாய்ந்த ஏவுகணை வெற்றி... எச்சரிக்கும் புதின்

உக்ரைன் போரில் ரஷ்யாவை உலக நாடுகள் பலவும் எதிர்த்துவரும் வேளையில், `சர்மாட்' எனும் கண்டம்விட்டு கண்டம் பாயும் புதிய ஏவுகணையை, ரஷ்யா வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது.

Published:Updated:
கண்டம்விட்டு கண்டம் பாயும் `சர்மட்' ஏவுகணை- ரஷ்யா வெற்றி

உக்ரைனில் கடந்த பிப்ரவரி 24-ம் தேதி முதல் ரஷ்யா நடத்திவரும் ஆக்கிரமிப்புப் போரைக் கண்டித்து, உலக நாடுகள் பலவும் உக்ரைனுக்கு ராணுவ உபகரணங்கள் அளித்தல் போன்ற உதவிகளைச் செய்துவருகின்றன. மேலும், இந்தப் போரில் ரஷ்யாவை எதிர்க்க அமெரிக்கப் படைகள் நேரடியாகக் களத்தில் இறங்காது, ஆனால் உக்ரைனுக்குத் தேவையான அனைத்து ராணுவ உதவிகளையும் அமெரிக்கா அளிக்கும் என, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியிருந்தார். அதைத் தொடர்ந்து உக்ரைனுக்கு ராணுவ உதவிகளை அளிக்கும் அமெரிக்கா உள்ளிட்ட அனைத்து நாடுகளையும் ரஷ்யா எச்சரித்துவந்தது.

இந்த நிலையில் வடமேற்கு ரஷ்யாவின் ஆர்க்காங்கெல்ஸ்க் பகுதியில், `சர்மாட்' எனும் கண்டம்விட்டு கண்டம் பாயும் புதிய ஏவுகணைச் சோதனையை ரஷ்யா நேற்று வெற்றிகரமாக செய்திருக்கிறது. இதை ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

ரஷ்ய அதிபர் புதின்
ரஷ்ய அதிபர் புதின்
ட்விட்டர்

சர்மாட் ஏவுகணை சோதனையின் வெற்றி குறித்துப் பேசிய ரஷ்ய அதிபர் புதின், ``மிகத் தனித்துவமான இந்த ஆயுதம் ரஷ்யப் படைகளின் போர்த்திறனை இன்னும் அதிகப்படுத்தும். மேலும் வெளிப்புற அச்சுறுத்தல்களிலிருந்து ரஷ்யாவின் பாதுகாப்பையும் இது உறுதி செய்யும். அதுமட்டுமல்லாமல் பூமியில் உள்ள எந்த இலக்கையும் தாக்கக்கூடியது இந்த சர்மாட். இனி ரஷ்யாவை எச்சரிக்க முயல்பவர்களை இது இரண்டு முறை சிந்திக்கவைக்கும்" என நேற்றுக் கூறியிருந்தார்.

இது தொடர்பாக ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ``சர்மாட் உலகின் மிக நீண்ட தூர இலக்கையும் அழிக்கக்கூடிய மிக சக்திவாய்ந்த ஏவுகணை என்றும், இந்த ஏவுகணை, அணுசக்திப் பொருள்களைச் சுமந்து செல்லும் திறன்கொண்டது என்பதால் இது ரஷ்யாவின் அணுசக்திப் படைகளின் போர்த்திறனையும் அதிகரிக்கும்" என்று கூறப்பட்டிருந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism