Published:Updated:

`ஐ.நா மனித உரிமை கவுன்சிலிலிருந்து ரஷ்யா இடைநீக்கம்! - வாக்களிக்காமல் புறக்கணித்த இந்தியா

ஐ.நா மனித உரிமை கவுன்சில்

உக்ரைன் போரின் எதிரொலியாக ஐ.நா மனித உரிமை கவுன்சிலிலிருந்து ரஷ்யா தற்காலிகமாக நீக்கம் செய்யப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்திருக்கிறது.

`ஐ.நா மனித உரிமை கவுன்சிலிலிருந்து ரஷ்யா இடைநீக்கம்! - வாக்களிக்காமல் புறக்கணித்த இந்தியா

உக்ரைன் போரின் எதிரொலியாக ஐ.நா மனித உரிமை கவுன்சிலிலிருந்து ரஷ்யா தற்காலிகமாக நீக்கம் செய்யப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்திருக்கிறது.

Published:Updated:
ஐ.நா மனித உரிமை கவுன்சில்

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் பிப்ரவரி 24-ம் தேதி தொடங்கியது. இந்தப் போரில் உக்ரைனின் மருத்துவமனைகள், கல்லூரிகள், குடியிருப்புப் பகுதிகளிலும் ரஷ்யப் படையினர் தாக்குதல் நடத்தினர். இது தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் வெளியாகி உலகையே அதிரவைத்தன. 

புதின் -  மோடி
புதின் - மோடி

ஐ.நா.வின் மனித உரிமை கவுன்சில் 47 உறுப்பினர்களைக்கொண்டது.  இதன் உறுப்பினர்கள் ஐ.நா சபையின் 193 உறுப்பு நாடுகளால் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கப்பட்டுவருகிறார்கள். இந்த கவுன்சிலில் ரஷ்யாவும் உறுப்பு நாடாக இருக்கிறது. உக்ரைனில் உள்ள புச்சா பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் பல்வேறு பொதுமக்கள் தாக்குதலுக்கு ஆளானதாகப் புகார் எழுந்த நிலையில், மனித உரிமை கவுன்சிலிலிருந்து ரஷ்யாவை நீக்க வேண்டும் என அமெரிக்க தூதர் லிண்டா தாமஸ் கிரீன்பீல்ட் அழைப்பு விடுத்திருந்தார். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதைத் தொடர்ந்து வாக்கெடுப்பு நடைபெற்றது. ரஷ்யாவை மனித உரிமை கவுன்சிலிலிருந்து நீக்கம் செய்யும் தீர்மானத்துக்கு 93 நாடுகள் ஆதரவு தெரிவித்தது. இந்த நிலையில், 24 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. மேலும் 58 நாடுகள் வாக்களிக்கவில்லை. 3-ல் 2 பங்கு வாக்குகள் தீர்மானத்துக்கு ஆதரவாகப் பதிவானது எனக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து ரஷ்யா  மனித உரிமைகள் கவுன்சிலிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவுக்கு எதிராக வாக்களிக்காமல் புறக்கணித்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism