Published:Updated:

நேட்டோவில் சேரத்துடிக்கும் பின்லாந்து; வரவேற்கும் நேட்டோ... எச்சரிக்கும் ரஷ்யா!

நேட்டோவில் சேரத்துடிக்கும் பின்லாந்து

உக்ரைனைத் தொடர்ந்து, தற்போது பின்லாந்தும் நேட்டோ அமைப்பில் சேர அந்நாட்டின் 60% மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக ஃபின்னிஷ் ஈவா திங்க் டேங்க் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

நேட்டோவில் சேரத்துடிக்கும் பின்லாந்து; வரவேற்கும் நேட்டோ... எச்சரிக்கும் ரஷ்யா!

உக்ரைனைத் தொடர்ந்து, தற்போது பின்லாந்தும் நேட்டோ அமைப்பில் சேர அந்நாட்டின் 60% மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக ஃபின்னிஷ் ஈவா திங்க் டேங்க் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Published:Updated:
நேட்டோவில் சேரத்துடிக்கும் பின்லாந்து

நேட்டோ அமைப்பில் சேர்வதற்கான முயற்சியை உக்ரைன் முன்னெடுத்ததன் விளைவாகவே ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே 5 வாரங்களுக்கும் மேலாகப் போர் நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில், ரஷ்யாவின் மற்றொரு அண்டை நாடான பின்லாந்து, நேட்டோவில் சேரவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கெனவே ரஷ்ய வெளியுறவு அமைச்சக அதிகாரி ஒருவர், பின்லாந்து அல்லது ஸ்வீடன் நேட்டோவில் சேர முயன்றால் கடுமையான அரசியல் மற்றும் இராணுவ விளைவுகள் ஏற்படும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதுமட்டுமல்லாமல், `நேட்டோ உறுப்புரிமைக்கு பின்லாந்து விண்ணப்பிப்பது பெரிய ஆபத்தை உண்டாக்கும்' என பின்லாந்து நாட்டின் ஜனாதிபதி சவுலி நினிஸ்டோ(Sauli Niinistö) சமீபத்தில் கூறியிருந்தார்.

ரஷ்யா - உக்ரைன் போர்
ரஷ்யா - உக்ரைன் போர்

இந்த நிலையில், ``இந்த நேரத்தில் நேட்டோவில் பின்லாந்து சேரலாமா, வேண்டாமா என்று முடிவெடுத்துவிட்டது" என பின்லாந்து பிரதமர் சன்னா மரின்(Sanna Marin) கூறியதாக பைனான்சியல் டைம்ஸ்( Financial Times) என்ற ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், ஃபின்னிஷ் வணிகம் மற்றும் கொள்கை மன்றமான ஈவா திங்க் டேங்க் கடந்த மாதம் நடத்திய ஆய்வில், `பின்லாந்தின் 60% மக்கள் நேட்டோவில் பின்லாந்து சேர்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர்' என்பதாகத் தகவல்களும் வெளியாகியுள்ளன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க்
நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க்

இதுகுறித்து கடந்த மாதம் மார்ச் 31-ம் தேதி நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க்(Jens Stoltenberg), ``அவர்கள்(பின்லாந்து) விண்ணப்பித்தால் மிகவும் வரவேற்கப்படுவார்கள் என நான் எதிர்பார்க்கிறேன். மேலும், நேட்டோவின் உறுப்பினராக பின்லாந்து சேர்வதற்கான நெறிமுறையை விரைவாக ஏற்றுக்கொள்வதற்கும், அதனைப் பின்தொடர்வதற்கும் ஒரு வழியைக் கண்டுபிடிப்போம்" என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யா ஒருபுறம் எச்சரிக்கை விடுக்க, மறுபுறம் பின்லாந்து மக்கள் ஆதரவு தெரிவிக்க தற்போது இரண்டுக்கும் நடுவில் முடிவெடுக்க வேண்டிய சூழலில் பின்லாந்து அரசு இருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism