Published:Updated:

``கச்சா எண்ணெய் விலை... உலகப் பொருளாதாரத்தில் பேரழிவு!” - எச்சரிக்கும் ரஷ்யா

ரஷ்ய அதிபர் புதின் ( Alexei Nikolsky )

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்று 300 டாலரை எட்டும் என ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.

``கச்சா எண்ணெய் விலை... உலகப் பொருளாதாரத்தில் பேரழிவு!” - எச்சரிக்கும் ரஷ்யா

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்று 300 டாலரை எட்டும் என ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.

Published:Updated:
ரஷ்ய அதிபர் புதின் ( Alexei Nikolsky )

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துவருவதால், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், பிரிட்டன், கனடா, ஜப்பான் ஆகிய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதித்தன. மேலும் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு மேற்கத்திய நாடுகள் தடை விதித்துள்ளன. இதனால் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்துவருகிறது.

ரஷ்யா உக்ரைன் போர்
ரஷ்யா உக்ரைன் போர்
russia ukraine war

இந்நிலையில், ரஷ்யாவின் துணைப் பிரதமர் அலெக்சாண்டர் நோவாக் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ``ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு மேற்கத்திய நாடுகள் தடைவிதித்துள்ளதால், சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 300 டாலரை எட்டும். இது உலகப் பொருளாதாரத்தில் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்குப் பேரழிவை ஏற்படுத்தும். எதிர்காலத்தில் கச்சா எண்ணெய் விலை எந்த அளவுக்கு உயரும் என்று கணிக்க முடியாது'' என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism