Published:Updated:

``பொருளாதாரத் தடையால் சர்வதேச விண்வெளி ஆய்வு பாதிக்கப்படும்” - எச்சரிக்கும் ரஷ்யா

சர்வதேச விண்வெளி ஆய்வு

``ரஷ்யாவின் மீது விதித்துள்ள பொருளாதார தடையை நீக்க வேண்டும்” - விண்வெளி ஆய்வாளர்

``பொருளாதாரத் தடையால் சர்வதேச விண்வெளி ஆய்வு பாதிக்கப்படும்” - எச்சரிக்கும் ரஷ்யா

``ரஷ்யாவின் மீது விதித்துள்ள பொருளாதார தடையை நீக்க வேண்டும்” - விண்வெளி ஆய்வாளர்

Published:Updated:
சர்வதேச விண்வெளி ஆய்வு

ரஷ்யா உக்ரைன் போர் சூழலால் உலக நாடுகள் ரஷ்யாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. மேலும், பல நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதித்துள்ளன.

ரஷ்யாவின் மீது விதிக்கப்பட்டுள்ள தடையால் உலகம் முழுவதும் உணவுப் பொருள்களின் விலை கடும் உச்சத்தை அடையும் என கடந்த சில தினங்களுக்கு முன் ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்திருந்தார்.

புதின்
புதின்

இந்த நிலையில், ரஷ்ய விண்வெளி ஏஜென்சியின் தலைவர் ரோஸ்கோஸ்மோஸ் ஊடகத்திடம் வெளியிட்ட செய்தியில் ``ரஷ்யாவிற்கு எதிரான மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடையால் சர்வதேச விண்வெளி நிலையம் செயலிழக்கும் அபாயம் உள்ளது.

எனவே உடனடியாக ரஷ்யாவின் மீது விதித்துள்ள பொருளாதார தடையை நீக்க வேண்டும்." எனத் தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அமெரிக்கா
அமெரிக்கா

ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளால் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையமான ISS-க்கு ரஷ்யா தற்போது வழங்கிவரும் சேவைகளை நிறுத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism