Published:Updated:

உக்ரைன்: ``498 ரஷ்ய வீரர்கள்; உக்ரைன் வீரர்கள்..?!’’ - உயிரிழப்புகள் குறித்து ரஷ்ய ராணுவம்

உக்ரைன் போர்

"உக்ரைன் போரில் ரஷ்ய வீரர்கள் 498 பேர் உயிரிழப்பு... 2,000 உக்ரைன் வீரர்கள் பலி."- ரஷ்ய ராணுவம்.

உக்ரைன்: ``498 ரஷ்ய வீரர்கள்; உக்ரைன் வீரர்கள்..?!’’ - உயிரிழப்புகள் குறித்து ரஷ்ய ராணுவம்

"உக்ரைன் போரில் ரஷ்ய வீரர்கள் 498 பேர் உயிரிழப்பு... 2,000 உக்ரைன் வீரர்கள் பலி."- ரஷ்ய ராணுவம்.

Published:Updated:
உக்ரைன் போர்

உக்ரைன் நேட்டோ அமைப்பில் சேர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெறும் அச்சுறுத்தலாகத் தொடங்கிய ரஷ்யாவின் செயல்பாடுகள் கடந்த வாரம் வியாழக்கிழமை உக்ரைனில் போராக வெடித்தன. கிட்டத்தட்ட ஏழு நாள்களுக்கு மேலாக உக்ரைனில் போர் நீடித்துவரும் நிலையில், ரஷ்யப் படைகள் உக்ரைன் தலைநகர் கீவ், கார்கிவ் போன்ற முக்கிய நகரங்களைக் குறிவைத்துத் தாக்கிவருகின்றன. இதற்கிடையில் பெலாரஸும் ரஷ்யப் படைக்கு ஆதரவாக உக்ரைனில் களமிறங்கிவிட்டது. போரால் இருநாட்டுத் தரப்பிலும் உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டிருந்தாலும்கூட, இதுவரையில் ரஷ்யப் படையினர் எத்தனை பேர் இறந்தனர் என்று ரஷ்யா அறிவிக்காமலேயே இருந்தது.

உக்ரைன்
உக்ரைன்

இந்த நிலையில் முதன்முறையாக உயிர்ச்சேதம் குறித்தான அதிகாரபூர்வ அறிவிப்பை ரஷ்ய ராணுவம் தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி ரஷ்ய வீரர்கள் 498 பேர் போரில் பலியாகியிருப்பதாகவும், 2,000 உக்ரைன் வீரர்கள் இறந்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது. முன்னதாக அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, "ஆறு நாள்களாக நடந்துவரும் போரில் இதுவரை 6,000 ரஷ்ய வீரர்கள் உக்ரைன் ராணுவத்தால் கொல்லப்பட்டுள்ளனர்" என நேற்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!