Published:Updated:

உக்ரைன்: `2-ம் உலகப்போரின் அதே நிலைதான் இப்போதும்!' - ஜெலன்ஸ்கி

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி

`உக்ரைனின் நேற்றைய இரவு மிகக் கொடூரமானது. மக்களின் வாழ்விடங்களில் மீண்டும் துப்பாக்கிச் சூடு, மீண்டும் குண்டுவெடிப்பு. ஆக்கிரமிப்பாளர்கள் இலக்காக ஏற்றுக்கொள்ளத்தக்க ஒரு விஷயம் கூட இங்கில்லை.' - ஜெலன்ஸ்கி

உக்ரைன்: `2-ம் உலகப்போரின் அதே நிலைதான் இப்போதும்!' - ஜெலன்ஸ்கி

`உக்ரைனின் நேற்றைய இரவு மிகக் கொடூரமானது. மக்களின் வாழ்விடங்களில் மீண்டும் துப்பாக்கிச் சூடு, மீண்டும் குண்டுவெடிப்பு. ஆக்கிரமிப்பாளர்கள் இலக்காக ஏற்றுக்கொள்ளத்தக்க ஒரு விஷயம் கூட இங்கில்லை.' - ஜெலன்ஸ்கி

Published:Updated:
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி

உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்துக் கொண்டிருக்கிறது. உக்ரைன் தலைநகர் கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களைக் கைப்பற்ற ரஷ்யப் படைகள் முனைப்பு காட்டிவருகின்றன. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தலைநகர் கீவில் இருந்தபடி களநிலவரத்தை வீடியோ மூலமாக விவரித்துக் கொண்டிருக்கிறார். ரஷ்யா உக்ரைனுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ள அழைப்பு விடுத்திருந்தாலும், அந்த பேச்சுவார்த்தையை பெலாரஸில் நடத்த ரஷ்யா திட்டமிட்டிருப்பதால், ஜெலன்ஸ்கி தயக்கம் காட்டி வருகிறார்.

உக்ரைன்
உக்ரைன்

இந்த நிலையில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி அறிக்கை ஒன்று வெளியிட்டிருக்கிறார். அதில், ``உக்ரைனின் நேற்றைய இரவு மிகக் கொடூரமானது. மக்களின் வாழ்விடங்களில் மீண்டும் துப்பாக்கிச் சூடு, மீண்டும் குண்டுவெடிப்பு. ஆக்கிரமிப்பாளர்கள் இலக்காக ஏற்றுக்கொள்ளத்தக்க ஒரு விஷயம் கூட எங்கள் நாட்டில் இல்லை. அவர்கள் அனைத்து உயிரினங்களுக்கு எதிராகவும் சண்டையிடுகிறார்கள். மழலையர் பள்ளி, ஆம்புலன்ஸ் என்று பாராமல் அனைத்தையும் தாக்குகிறார்கள். வாசில்கிவ், கீவ், செர்னிகிவ், சுமி, கார்கிவ் மற்றும் உக்ரைனில் உள்ள பல நகரங்கள் தற்போது கடைசியாக நாங்கள் இரண்டாம் உலகப் போரின் போது எங்கள் நிலங்களில் அனுபவித்த நிலைமையில் இருக்கிறோம்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism