Published:Updated:

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு வருகை தரும் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர்!

ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ( ட்விட்டர் )

ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இரண்டு நாள் பயணமாக இந்தியா வர இருப்பதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு வருகை தரும் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர்!

ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இரண்டு நாள் பயணமாக இந்தியா வர இருப்பதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Published:Updated:
ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ( ட்விட்டர் )

ரஷ்யா- உக்ரைன் இடையே தொடர்ந்து நடந்து வரும் யுத்தத்தில் பல நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். பல பில்லியன் மக்கள் தங்கள் நாட்டை விட்டு அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

உக்ரைன் ரஷ்யா விவகாரத்தில் இந்தியா தொடர்ந்து நடுநிலை வகித்து வருகிறது. ஐ.நா சபையில் ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானங்களில் இந்தியா அமைதிப் பேச்சுவார்த்தை ஒன்று மட்டுமே தீர்வு எனக்கூறி தொடர்ந்து யாருக்கும் வாக்களிக்காமல் இருந்து வருகிறது.

இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே பல ஆண்டுகளாக நெருங்கிய உறவு இருப்பதால், இந்தியா இந்த விவகாரத்தில் ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடுக்க தயங்குவதாக அரசியல் விமர்சகர்கள் பலரும் கூறி வருகின்றனர். உக்ரைன் இடையேயான போர்ச் சூழலில், ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியா வரவிருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியிருக்கிறது.

ரஷ்யா - உக்ரைன் போர்
ரஷ்யா - உக்ரைன் போர்

இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் மற்றும் முக்கிய இராணுவ தடவாளங்கள் பெரும்பாலானவற்றை வாங்குகிறது என்பதால் ரஷ்ய அமைச்சரின் வருகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ``ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் ஹெச்.இ.செர்ஜி லாவ்ரோவ் மார்ச் 31-ம் தேதி அன்று புது டெல்லிக்கு அதிகாரப்பூர்வமாக வர இருக்கிறார். அவர் ஏப்ரல் 1-ம் தேதி செல்வார்." என்று தெரிவித்துள்ளது. ஆனால், ரஷ்ய அமைச்சர் யார் யாரைச் சந்திப்பார் என்பது பற்றிய எந்த விவரங்களையும் வெளியுறவு அமைச்சகம் தெரிவிக்கவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ரஷ்ய அதிபர் - சீன அதிபர்
ரஷ்ய அதிபர் - சீன அதிபர்

மேற்கத்திய நாடுகளின் அழுத்தம் அதிகரித்த போதிலும், ரஷ்யாவின் படையெடுப்பை எதிர்த்து சீனாவும் இந்தியாவும் வாக்களிக்கவில்லை. கடந்த வாரம் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி புது டெல்லிக்கு வந்து சென்றதைத் தொடர்ந்து, தற்போது இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு செர்ஜி லாவ்ரோவ் இந்தியா வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism