Published:Updated:

பொதுக்கூட்டத்தில் புதின் உரை... பாதியில் நிறுத்தப்பட்ட ரஷ்ய சேனல் ஒளிபரப்பு! - நடந்தது என்ன?

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் மாஸ்கோவில் சிறப்புரை

ரஷ்ய அதிபர் புதின் மாஸ்கோவில் நேற்று சிறப்புரையாற்றியபோது, ரஷ்ய அரசுத் தொலைக்காட்சியில் புதினின் உரை 10 நிமிடங்கள் துண்டிக்கப்பட்டது.

பொதுக்கூட்டத்தில் புதின் உரை... பாதியில் நிறுத்தப்பட்ட ரஷ்ய சேனல் ஒளிபரப்பு! - நடந்தது என்ன?

ரஷ்ய அதிபர் புதின் மாஸ்கோவில் நேற்று சிறப்புரையாற்றியபோது, ரஷ்ய அரசுத் தொலைக்காட்சியில் புதினின் உரை 10 நிமிடங்கள் துண்டிக்கப்பட்டது.

Published:Updated:
ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் மாஸ்கோவில் சிறப்புரை

உக்ரைனில், ரஷ்ய ராணுவப் படை கடந்த மாதம் (பிப்ரவரி) 24-ம் தேதி தொடங்கி தொடர்ந்து போர் புரிந்துவருகிறது. போரை உடனடியாக நிறுத்துமாறு ரஷ்யாவுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தபோதும், ரஷ்யா அதை ஏற்க மறுத்துவருகிறது. ரஷ்யாவின் இத்தகைய பதிலுக்கு உலக நாடுகள் பலவும் புதினுக்கு எதிராகத் தங்களது கண்டனங்களை வெளிப்படுத்திவருகின்றன. இதற்கிடையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், மாஸ்கோ கால்பந்து மைதானத்தில் ரஷ்ய மக்களிடையே நேற்று சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சி ரஷ்ய அரசுத் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்

அப்போது மேடையில் தேசபக்தி கீதம் பின்னணியில் இசைக்க அதிபர் புதின், ``நமது தலைசிறந்த ராணுவ வீரர்களில் ஒருவரின் பிறந்தநாளுடன் தற்செயலாக இந்த நடவடிக்கையின் ஆரம்பம் ஒத்துப்போனது" என உரையாற்றிக்கொண்டிருந்த சமயத்தில் ரஷ்ய அரசுத் தொலைக்காட்சியில் இந்த நிகழ்ச்சியின் ஒளிபரப்பு திடீரென துண்டிக்கப்பட்டது. சுமார் 10 நிமிடங்கள் இந்த நிகழ்ச்சி துண்டிக்கப்பட்டதையடுத்து புதினின் உரை மீண்டும் முதலிலிருந்து முழுமையாக அரசுத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இதனால் ரஷ்ய ஊடக வட்டாரத்தில் சற்று பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இந்தச் சம்பவம் தொடர்பாக, `ஒளிபரப்பு சேவையகத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பப் பிரச்னைகளால் எதிர்பாராதவிதமாக ஒளிபரப்பு தடைப்பட்டது' எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய புதின், ``நாடு நீண்டகாலமாக இது போன்ற ஒற்றுமையைக் காணவில்லை. ரஷ்யாவை அச்சுறுத்துவதற்கு அமெரிக்கா அந்த நாட்டைப் பயன்படுத்துவதால் உக்ரைனில் இது போன்ற நடவடிக்கை அவசியம்" என மக்களிடம் பேசினார். இடையில், ``நண்பர்களுக்காக ஆத்மாவைத் துறப்பதைவிட மேலான அன்பு எதுவும் இல்லை" என்ற பைபிள் வாசகத்தையும் மக்கள் முன் கூறினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!