Published:Updated:

`இன்ஸ்டாகிராமை பயன்படுத்தியதால் 6 ஆண்டுகள் சிறை!' - குமுறும் ரஷ்ய சோசியல் மீடியா இன்ஃப்ளூயன்ஸர்

வெரோனிகா லோகினோவா ( இன்ஸ்டாகிராம் )

ரஷ்ய அரசு 'Fake News Law' எனும் சட்டத்தை அமல்படுத்தி, ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்களுக்கு தடைவிதித்தது

`இன்ஸ்டாகிராமை பயன்படுத்தியதால் 6 ஆண்டுகள் சிறை!' - குமுறும் ரஷ்ய சோசியல் மீடியா இன்ஃப்ளூயன்ஸர்

ரஷ்ய அரசு 'Fake News Law' எனும் சட்டத்தை அமல்படுத்தி, ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்களுக்கு தடைவிதித்தது

Published:Updated:
வெரோனிகா லோகினோவா ( இன்ஸ்டாகிராம் )

உக்ரைன் மீதான படையெடுப்பின் காரணமாக அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளின் அதிருப்தியை ரஷ்யா சம்பாதித்திருக்கிறது. ரஷ்யாவின் செயலுக்கு தொடர்ந்து கண்டனம் தெரிவித்துவரும் அந்த நாடுகள், போரில் உக்ரைன் பக்க நின்று அந்த நாட்டுக்கு ஆயுத மற்றும் நிதியுதவி அளித்து வருகின்றன.

ரஷ்யாவில் அதிபர் புதின் உக்ரைனை எதிர்கொள்ள குடிமக்களை களத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்திருக்கிறார். போர் தொடங்கப்பட்ட நாள்முதலே சமூக வலைதளங்களில் உக்ரைனுக்கு ஆதரவாகவும், ரஷ்யாவுக்கு எதிராகவும் செய்திகள் உலவி வந்தன. இதன்காரணமாக ரஷ்ய அரசு  'Fake News Law' எனும் சட்டத்தை அமல்படுத்தி, ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்களுக்கு தடைவிதித்தது.

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம்
ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம்

இந்த நிலையில், இன்ஸ்டாகிராமை பயன்படுத்தியதாக ரஷ்ய அரசால் 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை எதிர்கொள்வதாக, ரஷ்ய ஃபேஷன் மாடல் ஒருவர் கூறியிருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.

ரஷ்ய ஊடகங்களில் வெளியான தகவல்களின்படி அவரின் பெயர் வெரோனிகா லோகினோவா(Veronika Loginova) என்று தெரியவந்திருக்கிறது. இன்ஸ்டாகிராமில் பிரபலமானவராக அறியப்படும் இவர், ஃபேஷன் மற்றும் அழகு தொடர்பாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுவந்திருக்கிறார். இருப்பினும் அவர்மீது, "தீவிரவாத நடவடிக்கைகள்" என்று குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது.

வெரோனிகா லோகினோவா
வெரோனிகா லோகினோவா
இன்ஸ்டாகிராம்

இது குறித்து லோகினோவா இன்ஸ்டாகிராமில், ``ஆகஸ்ட் 17-ல், நான் பாரிஸில் இருந்தபோது, நடுங்கும் குரலுடன் என் அம்மாவிடமிருந்து அழைப்பு வந்தது. `உன்னைத்தேடி வீட்டுக்கு போலீஸ் வந்திருக்கிறார்கள். இன்ஸ்டாகிராமைப் பயன்படுத்தியதற்காக உனக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்படும் என்று அச்சுறுத்துகிறார்கள்' என்று போனில் அம்மா கூறினார். இப்போது இன்ஸ்டாகிராமைப் பயன்படுத்தியதற்காக நான் 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவிக்கப் போகிறேன். நான் மிகவும் தனித்து நிற்கிறேன்" என ரஷ்ய மொழியில் பதிவிட்டிருக்கிறார்.

மேலும், இன்ஸ்டாகிராமைப் பயன்படுத்துவதன் அடிப்படையில் ரஷ்ய குடிமகன் தண்டிக்கப்படுவது இதுவே முதன்முறை என்றும் கூறப்படுகிறது.