Published:Updated:

உக்ரைன்: சிகிச்சைக்காக வீட்டைவிட்டு வெளியேறிய 4 வயது சிறுமி; ரஷ்ய ஏவுகணைத் தாக்குதலில் பரிதாப பலி!

உக்ரைன் - ரஷ்யா போர் ( ட்விட்டர் )

ரஷ்ய ஏவுகணைத் தாக்குதலில் 4 வயது சிறுமி ஒருவர் உட்பட 24 பேர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

உக்ரைன்: சிகிச்சைக்காக வீட்டைவிட்டு வெளியேறிய 4 வயது சிறுமி; ரஷ்ய ஏவுகணைத் தாக்குதலில் பரிதாப பலி!

ரஷ்ய ஏவுகணைத் தாக்குதலில் 4 வயது சிறுமி ஒருவர் உட்பட 24 பேர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
உக்ரைன் - ரஷ்யா போர் ( ட்விட்டர் )

உக்ரைனைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ரஷ்யா கடந்த 150 நாள்களுக்கும் மேலாக முயன்றுவருகிறது. உக்ரைன்- ரஷ்யா இடையே கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய யுத்தம் இன்னும் தொடர்கிறது. இரு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் இந்தப் போரில் இறந்திருக்கின்றனர். போர் தொடர்ந்துகொண்டிருப்பதால் உக்ரைன் குடிமக்கள் தங்கள் உடைமைகளைத் துறந்துவிட்டு அண்டை நாடுகளுக்கு அகதிகளாகச் சென்றுகொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், 4 வயது சிறுமி ஒருவர் ரஷ்யப் படைகளின் தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் பேசுபொருளாகியிருக்கிறது.

உக்ரைன் - ரஷ்யா போர்
உக்ரைன் - ரஷ்யா போர்
ட்விட்டர்

உக்ரைன் நாட்டில் போர் தொடங்கியபோது கீவ் நகரைவிட்டு வெளியேறிய ஆர்டெம் டிமிட்ரிவ் (​​Dmytrieva) மற்றும் அவர் குடும்பத்தினர் கடந்த வியாழன் வரை உக்ரைனின் பாதுகாப்பான நகரமாகக் கருதப்பட்ட தென்மேற்கில் 270 கிலோமீட்டர் (167 மைல்) தொலைவிலுள்ள வின்னிட்சியா (Vinnytsia) நகரத்தில் வசித்துவந்தனர். இந்த நிலையில், டவுன் சிண்ட்ரோம் (பேசமுடியாமல் சிரமப்படும்) நோயால் பாதிக்கப்பட்ட ஆர்டெம் டிமிட்ரிவின் 4 வயது சிறுமி லிசா டிமிட்ரிவ், தன் தாயுடன் பேச்சு சிகிச்சை நிபுணரைப் பார்க்க அந்த நகரைவிட்டு வெளியேறியிருக்கிறார்.

அந்த நேரத்தில் ​ரஷ்யப் படைகள் ஏவுகணைத்தாக்குதல் நடத்தியிருக்கின்றன. இந்தத் தாக்குதலில் லிசா, அவருடன் 7-8 வயதுடைய இரண்டு சிறுவர்கள் உட்பட 24 பேர் கொல்லப்பட்டனர். மேலும், சிறுமி லிசாவின் தாய் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உக்ரைன் - ரஷ்யா போர்
உக்ரைன் - ரஷ்யா போர்
ட்விட்டர்

லிசாவின் தாயார் தற்போது தீவிர சிகிச்சையில் இருக்கிறார். இந்த நிலையில், லிசாவின் உடல் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. அப்போது பாதிரியார் விட்டலி ஹோலோஸ்கேவிச், ``எனக்கு லிசாவைத் தெரியாது. ஆனால் இப்படி மக்கள் கொல்லப்படுவதை யாரும் அமைதியாகக் கடந்த செல்ல முடியாது. ஏனென்றால், ஒவ்வொரு மரணமும் நம் ஒவ்வொருவருக்கும் துக்கம்தான். நாங்கள் எங்கள் சகோதர, சகோதரிகளை இழந்து நிற்கிறோம். இறுதியாக ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்கிறேன். தீமை ஒருபோதும் வெல்ல முடியாது என்பது எங்களுக்குத் தெரியும்" எனக் கண்ணீர்விட்டுப் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

அதே ரஷ்ய ஏவுகணைத் தாக்குதலில், மருத்துவ மையத்திலிருந்த 7 வயது சிறுவனும், அவன் தாயும் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.