Published:Updated:

அதிபர் புதினை `சைக்கோ’ என்ற ரஷ்ய மாடல்... சூட்கேஸில் கண்டெடுக்கப்பட்ட உடல்! - நடந்தது என்ன?

ரஷ்ய மாடல் அழகி கிரெட்டா வெட்லர்

ஓராண்டுக்கு முன்பு ரஷ்ய அதிபர் புதினை சமூக வலைதளங்களில் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறிய ரஷ்ய மாடல், கொலை செய்யப்பட்டு சூட்கேஸில் அடைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு.

அதிபர் புதினை `சைக்கோ’ என்ற ரஷ்ய மாடல்... சூட்கேஸில் கண்டெடுக்கப்பட்ட உடல்! - நடந்தது என்ன?

ஓராண்டுக்கு முன்பு ரஷ்ய அதிபர் புதினை சமூக வலைதளங்களில் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறிய ரஷ்ய மாடல், கொலை செய்யப்பட்டு சூட்கேஸில் அடைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு.

Published:Updated:
ரஷ்ய மாடல் அழகி கிரெட்டா வெட்லர்

23 வயதான கிரெட்டா வெட்லர் ஒரு ரஷ்ய மாடல். இவர் கடந்த ஓராண்டுக்கு முன்பு சமூக வலைதளங்களில் ரஷ்ய அதிபர் புதினை `மனநலம் பாதிக்கப்பட்டவர்’ என விமர்சித்திருந்தார். ஆனால் அதற்குப் பிறகு வெகு நாள்களுக்குச் சமூக வலைதளங்களில் சத்தமே இல்லாமல் போனார். இந்த நிலையில், கிரெட்டா வெட்லர் தற்போது சூட்கேஸில் அடைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கிரெட்டா வெட்லரின் முன்னாள் காதலர் டிமிட்ரி கொரோவின், `நான்தான் கிரெட்டா வெட்லரை கழுத்தை நெரித்து கொலை செய்தேன்’ என ஒப்புக்கொண்டதாக டெய்லி ஸ்டார் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

ரஷ்ய அதிபர் புதின்
ரஷ்ய அதிபர் புதின்
Alexei Nikolsky

அதில், கிரெட்டா வெட்லரை கழுத்தை நெரித்துக் கொன்றதாகவும், பின்னர் அவளின் சடலத்தை ஒரு சூட்கேஸில் அடைத்துவைத்து, அதனுடன் மூன்று நாள்கள் தங்கியிருந்ததாகவும் அதிகாரிகளிடம் கூறியுள்ளார். மேலும், கிரெட்டா வெட்லர் இறந்தது தெரியக் கூடாது என்பதற்காக கிரெட்டா வெட்லரின் சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டுவந்ததாகவும், அதிகாரிகளிடம் டிமிட்ரி கொரோவின் கூறியிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism