Published:Updated:

``புதின் புற்றுநோயால் அவதிப்படுகிறார்; விரைவில் இறந்துவிடுவார்?" - உக்ரைன் உளவுத்துறைத் தலைவர் தகவல்

புதின்

புற்றுநோயால் அவதிபடும் புதின் விரைவில் இறந்துவிடுவார் என உக்ரைனின் உளவுத்துறைத் தலைவர் தகவல் தெரிவித்திருக்கிறார்.

``புதின் புற்றுநோயால் அவதிப்படுகிறார்; விரைவில் இறந்துவிடுவார்?" - உக்ரைன் உளவுத்துறைத் தலைவர் தகவல்

புற்றுநோயால் அவதிபடும் புதின் விரைவில் இறந்துவிடுவார் என உக்ரைனின் உளவுத்துறைத் தலைவர் தகவல் தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:
புதின்

கடந்த ஆண்டு, பிப்ரவரி மாதம் உக்ரைன்-ரஷ்யா போர் தொடங்கியது. பல மாதங்களைக் கடந்தும் தொடர்ந்து நடந்துவரும் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர உலக நாடுகள் முயன்றுவருகின்றன. இந்தச் சூழலில், அவ்வப்போது புதினின் உடல்நிலை குறித்த தகவல்களும் வேகமாகப் பரவிவருகின்றன. கடந்த சில மாதங்களாக, புதினின் கண்பார்வை நாளுக்கு நாள் மங்கிவருவதாகவும், புதின் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகின.

ஜெலன்ஸ்கியுடன் உக்ரைன் வீரர்கள்
ஜெலன்ஸ்கியுடன் உக்ரைன் வீரர்கள்

அதைத் தொடர்ந்து, ரஷ்ய அதிபர் புதினுக்கு புற்றுநோய் பாதிப்பு வேகமாக அதிகரித்துவருவதாகவும், இதனால் புதினின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்துவருவதாகவும், அவர் இன்னும் மூன்று ஆண்டுகள் மட்டுமே உயிருடன் இருப்பார் என மருத்துவர்கள் கூறியிருப்பதாகவும் இங்கிலாந்து ஊடகமான The Independent-ல் ரஷ்ய உளவாளி ஒருவர் அதிர்ச்சித் தகவலை தெரிவித்திருந்தார்.

அதை உறுதிபடுத்தும்விதமாக உக்ரைன் உளவுத்துறை அதிகாரி கைரிலோ புடானோவ் (Kyrylo Budanov) என்பவர் ஏபிசி என்ற செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில்," ரஷ்ய அதிபர் புதின் நீண்டகாலமாக உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார். அவருக்கு புற்றுநோய் இருப்பதாக நான் உறுதியாக நம்புகிறேன்.

ரஷ்யா - உக்ரைன்
ரஷ்யா - உக்ரைன்
ட்விட்டர்

அவர் கூடியவிரைவில் இறந்துவிடுவார் என்று நான் நினைக்கிறேன். புதினுக்கு நெருக்கமான மனித வட்டாரங்களிலிருந்து எங்களுக்கு இந்தத் தகவல் தெரியவந்தது. புதினின் மறைவுக்குப் பிறகு மற்றொரு ரஷ்யத் தலைவருக்கு அதிகாரம் மாற்றப்படும் என்பதும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.