ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், தனது வெளிநாட்டுப் பயணங்களின் போது வெளியேற்றும் கழிவுகளை, அவரின் பாதுகாவலர்கள் சூட்கேஸில் சேகரிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சர்வதேச பயணத்தின்போது புதினின் பாதுகாவலர்கள், இவரின் மலம் மற்றும் சிறுநீரை, சூட்கேஸில் சேகரிக்கின்றனர். சேகரிக்கப்பட்ட கழிவுகளை, பாதுகாவலர்கள் பத்திரமாக மாஸ்கோவிற்கு கொண்டு செல்கின்றனர். ரஷ்ய ராணுவ வீரர்களோடு இருக்கும் இந்தப் பாதுகாவலர்கள், புதின் கழிவறை செல்லும்போது, அவர்களும் கூடவே சென்று வருகின்றனர்.
ஏற்கெனவே, கேன்சரால் புதின் பாதிக்கப்பட்ட நிலையில், இன்னும் குறைந்த காலமே உயிர் வாழ்வார் என்ற செய்திகள் பரவி வருகின்றன. இச்சூழலில், இவரின் ஆரோக்கியம் மற்றும் நோய் குறித்த தகவலை, கழிவுகள் மூலம் அறிந்து கொள்ள முடியும் என்பதால், இந்த விநோதமான செயலைச் செய்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
கடந்த 2017-ம் ஆண்டில், பிரான்ஸ் பயணத்தின் போது முதல் முறையாக இதைக் கண்காணித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு சவூதி அரேபிய பயணத்தின் போதும், இத்தகைய நிகழ்ந்துள்ளது.

இந்தச் செயலை ஊர்ஜிதப்படுத்தும் வகையில் ஆன்லைனில் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. புதின் கழிவறையிலிருந்து வெளிவரும் அந்த வீடியோவில் மொத்தம் 6 பேர் கழிவறையிலிருந்து வருகின்றனர். முதல் இரண்டு பாதுகாவலர்களைத் தொடர்ந்து வந்த அடுத்த பாதுகாவலரின் கையில் சிறப்பு சூட்கேஸ் உள்ளது. அதனைத் தொடர்ந்து புதின் வருகிறார். புதினின் விநோதமான இந்தப் பழக்கத்துக்கு விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.