Published:Updated:

`உக்ரைனியத் தோட்டாக்கள் வேண்டும்’ - போரைத் தவிர்க்க தங்களைத் தாங்களே சுட்டுக்கொள்ளும் ரஷ்ய வீரர்கள்!

உக்ரைன்

புதினின் ராணுவ வீரர்கள் உக்ரைனியத் தோட்டாக்களைத் தேடுகிறார்கள். அப்போதுதான் காலில் சுட்டுக்கொள்ள முடியும்.

`உக்ரைனியத் தோட்டாக்கள் வேண்டும்’ - போரைத் தவிர்க்க தங்களைத் தாங்களே சுட்டுக்கொள்ளும் ரஷ்ய வீரர்கள்!

புதினின் ராணுவ வீரர்கள் உக்ரைனியத் தோட்டாக்களைத் தேடுகிறார்கள். அப்போதுதான் காலில் சுட்டுக்கொள்ள முடியும்.

Published:Updated:
உக்ரைன்

உக்ரைன் - ரஷ்யா இடையே தொடரும் கடுமையான போரில் நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கான உக்ரைனியக் குடிமக்கள் தங்கள் நாட்டைவிட்டு அண்டை நாடுகளுக்கு அகதிகளாக அடைக்கலம் தேடிச் சென்றுள்ளனர். இந்த நிலையில், ரஷ்ய ராணுவ வீரர்கள் தங்களைத் தாங்களே காலில் சுட்டுக்கொள்வதாக `Daily Star’ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், ``உக்ரைனில் நடக்கும் போரிலிருந்து தப்பிக்க ரஷ்ய ராணுவ வீரர்கள் தங்கள் காலில் தாங்களே சுட்டுக்கொள்ளும் அளவுக்கு புதினின் ராணுவத்தில் மன உறுதி மிகவும் குறைந்துள்ளது.

உக்ரைன் -ரஷ்யா போர்
உக்ரைன் -ரஷ்யா போர்
ட்விட்டர்

மூன்று வாரங்களாக நடைபெறும் மிருகத்தனமான போரால் ரஷ்ய ராணுவ வீரர்கள் சோர்வடைந்துவருவதாகத் தோன்றுகிறது. இதுவரை 7,000 ரஷ்யர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், தாமாக முன்வந்து தங்கள் ராணுவப் பதவிகளை விட்டு வெளியேறுபவருக்குக் கடுமையான தண்டனைகள் காத்திருக்கின்றன. எனவே, விரைவாக இல்லம் திரும்பத் தங்களை தாங்களே காயப்படுத்திக்கொள்கின்றனர்" எனக் குறிப்பிட்டுள்ளது.

பெலாரஸ்ய ஊடகமான நெக்ஸ்டாவின் கூற்றுப்படி, ``புதினின் ராணுவ வீரர்கள் உக்ரைனியத் தோட்டாக்களைத் தேடுகிறார்கள். அப்போதுதான் காலில் சுட்டுக்கொள்ள முடியும்.

உக்ரைன்
உக்ரைன்

உக்ரைன் போர்க்களத்திலிருந்து தப்பிக்க வேண்டும் என்ற ஆசையில் புதினை மறுப்பவர்கள் எட்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையை எதிர்கொள்ளவேண்டி வரும். ரஷ்ய வீரர் ஒருவர் இது தொடர்பாகக் கூறும்போது, "14 நாள்களாகத் துப்பாக்கிச்சூடு நடத்துகிறோம்.

எங்களுக்கான உணவைத் திருடுகிறோம். வீடுகளுக்குள் புகுந்து, பொதுமக்களைக் கொல்கிறோம். எங்கும் சடலங்களாக உள்ளன" என வேதனையை வெளிப்படுத்தினார்.

உக்ரைன் ராணுவ வீரகள்
உக்ரைன் ராணுவ வீரகள்
twitter

மேலும், ரஷ்ய ராணுவ வீரர்களில் ஒருவரான கல்கின் செர்ஜி அலெக்ஸீவிச், "எனது அணிக்காக, இந்த நிலங்களின் மீதான எங்கள் ஆக்கிரமிப்புக்காக உக்ரைனில் உள்ள ஒவ்வொரு குடிமகனிடமும், முதியவரிடமும், பெண்ணிடமும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் துரோகப் படையெடுப்புக்கு நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்" எனத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.