Published:Updated:

``ரஷ்யா தனித்துவிடப்படவில்லை, மூன்றாம் உலகப்போர் நிகழ்ந்தால்..!'- ரஷ்ய அமைச்சர் எச்சரிக்கை

ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ்

"ரஷ்யா உக்ரைனுடன் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தத் தயார், அமெரிக்கா தான் பேச்சுவார்த்தை நடத்தவிடாமல் தடுக்கிறது" - ரஷ்யா வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ்.

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே கடந்த வாரம் வியாழக்கிழமை தொடங்கிய போர் 7-வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உலக நாடுகள் பலவும், ரஷ்யாவின் மீது பொருளாதாரத் தடை, தங்கள் நாட்டு வான்வெளியில் ரஷ்ய விமானங்கள் பறக்கத் தடை என தங்கள் எதிர்ப்புகளை வெளிப்படுத்தி வருகிறது. மேலும், போரால் பல்வேறு பேரழிவுகளை உக்ரைன் நாடு கண்டு வருவதால், கடந்த இருதினங்களுக்கு முன்பு ரஷ்யாவும், உக்ரைனும் பல்வேறு இழுபறிகளுக்குப் பிறகு பெலாரஸில் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், இந்த பேச்சுவார்த்தையில் இருநாடுகள் தரப்பிலிருந்தும் எந்தவித ஆக்கப்பூர்வ நடவடிக்கையும் எடுக்கப்படாததால், மீண்டும் உக்ரைனில் போரின் சீற்றம் அதிகரிக்கத் தொடங்கியது.

உக்ரைன் அதிபர் - ரஷ்ய அதிபர்
உக்ரைன் அதிபர் - ரஷ்ய அதிபர்

இந்த நிலையில், ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், ``மூன்றாம் உலகப்போர் நிகழ்ந்தால், அது அணு ஆயுதங்களை உள்ளடக்கிய பேரழிவுகளைத் தரும். உக்ரைன், ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தையைத் தள்ளிப் போடுவதற்கு அமெரிக்கா தான் காரணம். இன்றிரவு உக்ரைனுடன் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை ரஷ்யா நடத்தத் தயார். பல்வேறு நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதிப்பதால் ரஷ்யா ஒன்றும் தனித்து விடப்படவில்லை. ரஷ்யாவிற்கும் ஏராளமான நாடுகள் நண்பர்களாக உள்ளன" என்று கூறியுள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism