Published:Updated:

தொடங்கியது போர்..? ``உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கையைத் தொடங்குங்கள்!” - ரஷ்ய அதிபர் புதின் உத்தரவு

ரஷ்ய அதிபர் புதின் ( AP )

ஐ.நா பொதுச்செயலாளர் ஆன்டோனியோ, ``உங்கள் படை உக்ரைனைத் தாக்குவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். அமைதிக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்” என ரஷ்ய அதிபர் புதினைக் கேட்டுக்கொண்டார். ஆனால்...

ரஷ்யா - உக்ரைன் விவகாரம் எப்போது வேண்டுமென்றாலும் போர் வெடிக்கும் சூழ்நிலையிலேயே இருப்பதாக அமெரிக்கா உட்பட பல நாடுகளும் ரஷ்யாவுக்குக் கண்டனம் தெரிவித்துவருகின்றன. இந்த நிலையில் இன்று ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் அவசரக்கூட்டத்தை நடத்திவருகிறது.

அதில் பேசிய ஐ.நா பொதுச்செயலாளர் ஆன்டோனியோ, ``உங்கள் படை உக்ரைனைத் தாக்குவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். அமைதிக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்” என ரஷ்ய அதிபர் புதினைக் கேட்டுக்கொண்டார்.

எனினும், தற்போது போரைத் தொடங்குவதற்கான உத்தரவை ரஷ்ய அதிபர் புதின் வழங்கியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகயுள்ளன. இது தொடர்பாக பிரபல செய்தி நிறுவனமான ஏ.எஃப்.பி வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், உக்ரைன்மீது ராணுவ நடவடிக்கையைத் தொடங்க புதின் உத்தரவிட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஆயுதங்களைக் கீழே போடுமாறு உக்ரைனை ரஷ்யா கடுமையாக எச்சரித்துள்ளதாகவும் தெரிகிறது!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism