Published:Updated:

``ரஷ்யாவின் அச்சுறுத்தல் இன்னும் முடிந்துவிடவில்லை!" - எச்சரிக்கும் அமெரிக்கா

அமெரிக்கா - பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி

கீவ், செர்னிகிவ் பகுதியில் ராணுவ நடவடிக்கையைக் குறைப்பதாக ரஷ்யா கூறியதையடுத்து, ``கீவ்-வுக்கான அச்சுறுத்தல் முடிந்துவிட்டது என்று அர்த்தமல்ல, இது வெறும் இடப்பெயர்வு மட்டும்தான்" என அமெரிக்கா எச்சரித்துள்ளது.

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான போரின் 34-வது நாளான நேற்று, துருக்கி இஸ்தான்புல்லில் ரஷ்யா, உக்ரைன் பேச்சுவார்த்தை குழுக்கள் போர்நிறுத்தம் தொடர்பாக அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தையின்போது, துருக்கி அதிபர் எர்டோகன், ``இரு தரப்பிலும் நியாயம் உள்ளது. உலகமே உங்களிடமிருந்து வரும் நல்ல செய்திக்காகக் காத்திருக்கிறது” என்று கூறியிருந்தார். மேலும், இந்தப் பேச்சுவார்த்தை முடிவடைந்ததையடுத்து, ``பரஸ்பர நம்பிக்கையை அதிகரிப்பதற்கும், உடன்பாடு மற்றும் ஒப்பந்தத்தின் இறுதி இலக்கை அடைவதற்கும், கீவ் மற்றும் செர்னிகிவ் பகுதியில் ராணுவ நடவடிக்கைகளைத் தீவிரமாகக் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது" என்று ரஷ்ய துணை பாதுகாப்பு அமைச்சர் அலெக்சாண்டர் ஃபோமின் நேற்றுக் கூறியிருந்தார்.

ரஷ்யா உக்ரைன் போர்
ரஷ்யா உக்ரைன் போர்

அதைத் தொடர்ந்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ``உக்ரைனியர்கள் அப்பாவி மக்கள் அல்ல, இந்தப் போரில் நிறைய கற்றுக்கொண்டனர்" என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், அமெரிக்கா பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமையிடமான பென்டகன், ``இது வெறும் இடப்பெயர்வு மட்டும்தான். கீவ்வுக்கான அச்சுறுத்தல் முடிந்துவிட்டது என்று அர்த்தமல்ல" என்று எச்சரித்துள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி (John Kirby), ``கீவ்வைக் கைப்பற்றும் நோக்கத்தில் ரஷ்யா தோல்வியடைந்துள்ளது. இது வெறும் இடப்பெயர்வு மட்டும்தான். கீவ்வுக்கான அச்சுறுத்தல் முடிந்துவிட்டது என்று அர்த்தமல்ல. உக்ரைனின் பிற பகுதிகளுக்கு எதிராக ஒரு பெரிய தாக்குதலைக் காண நாம் அனைவரும் தயாராக இருக்க வேண்டும்" என்று கூறினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!