Published:Updated:

பொருளாதார நெருக்கடி: `பள்ளிகள் மூடல்; எரிபொருளைச் சேமிக்க வீட்டிலிருந்து வேலை பாருங்க' - இலங்கை அரசு

இலங்கை ( Eranga Jayawardena )

இலங்கையின் பொருளாதார நெருக்கடி காரணமாக, எரிபொருளைச் சேமிக்க மக்களை வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு இலங்கை அரசு அறிவுறுத்தியிருக்கிறது.

பொருளாதார நெருக்கடி: `பள்ளிகள் மூடல்; எரிபொருளைச் சேமிக்க வீட்டிலிருந்து வேலை பாருங்க' - இலங்கை அரசு

இலங்கையின் பொருளாதார நெருக்கடி காரணமாக, எரிபொருளைச் சேமிக்க மக்களை வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு இலங்கை அரசு அறிவுறுத்தியிருக்கிறது.

Published:Updated:
இலங்கை ( Eranga Jayawardena )

இலங்கையில் நிலவிவரும் கடும் பொருளாதார நெருக்கடியில், மக்கள் போராட்டத்தின் உச்சகட்ட விளைவாக மகிந்த ராஜபக்சே தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து நாட்டின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றார். ஆனாலும் இலங்கையில் இன்னும் பொருளாதார நெருக்கடி சரியானபாடில்லை.

இந்த நிலையில், ``இலங்கை முழுவதுமிருக்கும் எரிபொருள் நிலையங்களில் வாடிக்கையாளர்களுக்கு டோக்கன் வழங்கும் முறை தொடங்கும். 9,000 டன் டீசல் மற்றும் 6,000 டன் பெட்ரோல் கையிருப்பில் இருக்கிறது" என்று இலங்கையின் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.

கடும் பொருளாதார நெருக்கடியில் இலங்கை
கடும் பொருளாதார நெருக்கடியில் இலங்கை

வர்த்தகத் தலைநகரான கொழும்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு வார காலத்துக்கு பாடசாலைகள் மூடப்பட்டிருக்கும் நிலையில், மறு அறிவிப்பு வரும் வரை ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு அரசாங்கம் வலியுறுத்தியிருக்கிறது அந்நாட்டு. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, மூன்று சக்கர வாகனங்கள் பெட்ரோல் வாங்க வரிசையில் காத்திருக்கின்றன. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகிவருகின்றன.

இது தொடர்பாக ஆட்டோரிக்‌ஷா ஓட்டுநர் ஷெல்டன் என்பவர் பேசும்போது, ``நான்கு நாள்களாக வரிசையில் நிற்கிறேன். நான் சரியாகத் தூங்கவில்லை, சாப்பிடவில்லை. எங்களால் சம்பாதிக்க முடியாது, எங்கள் குடும்பங்களுக்கு உணவளிக்கவும் முடியாது'' என்றார் கலக்கத்துடன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!