Published:Updated:

அமெரிக்கா: இனவெறியால் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் பலி; நேரலையால் பரபரப்பு - இளைஞன் கைது

துப்பாக்கிச்சூடு நடத்திய இளைஞன் ( ட்விட்டர் )

அமெரிக்காவில் இனவெறி காரணமாகப் பல்பொருள் அங்காடியில் நுழைந்து 10 பேரைச் சுட்டுக் கொன்றதாக ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்கா: இனவெறியால் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் பலி; நேரலையால் பரபரப்பு - இளைஞன் கைது

அமெரிக்காவில் இனவெறி காரணமாகப் பல்பொருள் அங்காடியில் நுழைந்து 10 பேரைச் சுட்டுக் கொன்றதாக ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Published:Updated:
துப்பாக்கிச்சூடு நடத்திய இளைஞன் ( ட்விட்டர் )

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தின் பஃபேலோ சூப்பர் மார்க்கெட்டுக்கு கடந்த சனிக்கிழமை காரில் வந்து இறங்கிய கவச உடை அணிந்த 18 வயது இளைஞர் ஒருவர், திடீரென சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தினார்.

அவரின் திடீர்த் தாக்குதலில் 10 பேர் வரை பலியானதாகக் கூறப்படுகிறது. இந்தக் கொடூரமான துப்பாக்கிச்சூட்டில் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் எட்டுப் பேரும் இரண்டு அமெரிக்கர்களும் இறந்ததாகக் கூறப்படுகிறது. இந்தத் துப்பாக்கிச்சூட்டை அங்கிருந்த முன்னாள் காவல்துறை அதிகாரி ஒருவர் சரியான நேரத்தில் தடுத்ததால் அதிகமான உயிர்ப் பலி ஏற்படாமல் தடுக்கப்பட்டது.

கைபற்றப்பட்ட துப்பாக்கி
கைபற்றப்பட்ட துப்பாக்கி
ட்விட்டர்

உடனே சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறை அதிகாரிகள் அவரைக் கைதுசெய்தனர். இது தொடர்பாக நியூயார்க் நகர காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ”கவச உடை அணிந்து சனிக்கிழமை அன்று அங்காடிக்கு வந்த நபர், கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச்சூடு நடத்தினார். அவர் அணிந்திருந்த ஹெல்மெட்டில் பொருத்தப்பட்ட கேமரா உதவியுடன் இதை அவர் சமூக வலைதளப் பக்கத்தில் நேரலையும் செய்தார். இனவெறி நோக்கத்திலேயே இந்தத் தாக்குதல் நடந்திருக்கிறது. சோதனையில் கைப்பற்றப்பட்ட தகவல்களில் யூத எதிர்ப்பு, இனவெறி தொடர்பான வெள்ளை அறிக்கைகள் இருந்தன. இது தொடர்பாக தீவிர விசாரணையில் ஈடுபட்டுவருகிறோம். அவர் நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர், தனது ஊரிலிருந்து 300 கிலோமீட்டர் பயணம் செய்து இங்கு வந்து தக்குதல் நடத்தவேண்டிய அவசியம் குறித்து விசாரித்துவருகிறோம்” என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism