Published:Updated:

கவிழ்ந்தது இம்ரான் அரசு... பாகிஸ்தானின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டார் ஷெபாஸ் ஷெரீப்!

ஷெபாஸ் ஷெரீப் ( ட்விட்டர் )

பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷாபாஸ் ஷெரீப் தேர்வு செய்யப்படுள்ளார்.

கவிழ்ந்தது இம்ரான் அரசு... பாகிஸ்தானின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டார் ஷெபாஸ் ஷெரீப்!

பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷாபாஸ் ஷெரீப் தேர்வு செய்யப்படுள்ளார்.

Published:Updated:
ஷெபாஸ் ஷெரீப் ( ட்விட்டர் )

பாகிஸ்தானின் புதிய பிரதமராகப் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் சகோதரர் ஷெபாஸ் ஷெரீப் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இம்ரான் கான் கட்சியைச் சேர்ந்தவர்கள் ராஜினாமா செய்ததால், அவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் யாருமின்றி இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பாகிஸ்தானில் கடந்த ஒரு வருடமாகப் பொருளாதார சிக்கல் நீடித்து வருகிறது. அதனால், பிரதமராக இருந்த இம்ரான் கான் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. அதைத்தொடர்ந்து பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடந்த சனிக்கிழமை நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.  இந்த வாக்கெடுப்புக்கு முன்னதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ``திருடர்களுடன் சட்டமன்றத்தில் உட்கார மாட்டேன்" எனக்கூறி தேசிய சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். 

ஷெபாஸ் ஷெரீப்
ஷெபாஸ் ஷெரீப்
ட்விட்டர்

அவரை தொடர்ந்து, பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் உறுப்பினர்களும் வாக்கெடுப்பைப் புறக்கணித்து நாடாளுமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர். இந்த நிலையில், முன்னாள் தகவல் தொடர்பு அமைச்சர் ஃபவாத் சவுத்ரி, ``அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் தேசிய சட்ட மன்றத்திலிருந்து ராஜினாமா செய்வார்கள்" என்று கூறினார். அதைத் தொடர்ந்து, அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இம்ரான் கான்
இம்ரான் கான்
ட்விட்டர்

அதன் பின்னர் இம்ரான் கான், ``ஒருவர் மீது 16 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் வழக்கும், மற்றொருவர் மீது 8,000 கோடி ரூபாய் ஊழல் வழக்கும் உள்ளவர்கள் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள். இதை விடப் பெரிய அவமானம் நாட்டுக்கு இருக்க முடியாது. எனவே, தேசிய சட்ட மன்றத்திலிருந்து ராஜினாமா செய்கிறேன்" என்று கூறிவிட்டு ராஜினாமா செய்ததாகக் கூறப்படுகிறது. அதனால் நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் இன்றி  ஷெபாஸ் ஷெரீப் பிரதமராகி அவரது கட்சி ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism