Published:Updated:

ஜப்பான் முன்னாள் பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு... மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே ( ட்விட்டர் )

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே துப்பாக்கியால் சுடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

ஜப்பான் முன்னாள் பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு... மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே துப்பாக்கியால் சுடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

Published:Updated:
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே ( ட்விட்டர் )

ஜப்பானின் முன்னாள் பிரதமரும், ஜப்பானின் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் (LDP) தலைவருமானவர் ஷின்சோ அபே. இவர் மேற்கு ஜப்பானிலுள்ள நாரா நகரில் ஒரு கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிக்கொண்டிருந்தார். அப்போது பேசிக்கொண்டிருக்கும்போதே திடீரென கீழே சரிந்தார். உடனே அவரது பாதுகாவலர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார்கள். அங்கே அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. கீழே விழுந்ததால் அவருக்குக் காயம் ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே
ட்விட்டர்

ஆனால், ஜப்பானின் பிரபல செய்தி நிறுவனமான NHK அவர் சுடப்பட்டதாகச் செய்தி வெளியிட்டிருக்கிறது. இது தொடர்பாக அந்தச் செய்தி நிறுவனம் வெளியிட்டிருக்கும் தகவலில்,"ஜப்பானின் முன்னாள் பிரதமர் உரை நிகழ்த்திக்கொண்டிருக்கும்போது ஒரு துப்பாக்கிச் சத்தத்தை நமது செய்தி நிருபர் கேட்டிருக்கிறார். அதன் பிறகே முன்னாள் பிரதமர் கீழே சரிந்தார். மேலும் ஷின்சோ அபே-க்கு ரத்தப்போக்கும் இருந்தது. எனவே, அவர் சுடப்பட்டிருக்கிறார்" எனக் குறிப்பிட்டிருக்கிறது.

இதற்கிடையே துப்பாக்கியால் சுடப்பட்ட ஷின்சோ அபே உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருவதாக ஒரு தகவல் வரும் நிலையில், அவர் உயிரிழந்துவிட்டதாகவும் அதிகாரபூர்வமற்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!