Published:Updated:

ரஷ்யா: `மங்கும் கண் பார்வை; மூன்று ஆண்டுகளில் மரணம்' - புதின் உடல்நிலை குறித்த அதிர்ச்சி ரிப்போர்ட்!

புதின்

``புதினின் கை கால்கள் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு நடுங்கிக்கொண்டிருக்கின்றன. கடும் தலைவலியால் அவதிப்பட்டுவருகிறார்'' என்று செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

ரஷ்யா: `மங்கும் கண் பார்வை; மூன்று ஆண்டுகளில் மரணம்' - புதின் உடல்நிலை குறித்த அதிர்ச்சி ரிப்போர்ட்!

``புதினின் கை கால்கள் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு நடுங்கிக்கொண்டிருக்கின்றன. கடும் தலைவலியால் அவதிப்பட்டுவருகிறார்'' என்று செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

Published:Updated:
புதின்

பிப்ரவரி மாத இறுதியில் தொடங்கிய ரஷ்யா - உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான போர், இன்னும் முடிவுக்கு வரவில்லை. உலகம் முழுக்க இந்தப் போர் பற்றிய செய்திகளே அதிகம் காணப்படும் நிலையில், `ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்னும் மூன்று ஆண்டுகள் மட்டுமே உயிருடன் இருப்பார்' என்ற செய்தி வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது. பிரிட்டனைச் சேர்ந்த புகழ்பெற்ற ஊடகமான `The Independent' இது குறித்து செய்தி வெளியிட்டிருக்கிறது. இதையடுத்து மேலும் சில சர்வதேச ஊடகங்களும் புதினின் உடல்நிலை குறித்த செய்திகளை வெளியிட்டிருக்கின்றன.

ரஷ்யாவிலுள்ள உளவு நிறுவனமான எஃப்.எஸ்.பி-ல் (Federal Security Service) பணிபுரியும் உளவாளி ஒருவர், புதினின் உடல்நிலை குறித்த தகவல்களை பிரிட்டனிலுள்ள முன்னாள் ரஷ்ய உளவாளி போரிஸிடம் கூறியதாக `தி இண்டிபென்டன்ட்' ஊடகம் வெளியிட்ட செய்தியில் சொல்லப்பட்டிருக்கிறது. மேலும் அந்தச் செய்தியில்,

புற்றுநோய் பாதிப்பால் புதினின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்துவருகிறது. இன்னும் மூன்று ஆண்டுகள் மட்டுமே அவர் உயிரோடு இருப்பார்!
இவ்வாறு `தி இன்டிபெண்டன்ட்' ஊடகம் வெளியிட்ட செய்தியில் சொல்லப்பட்டிருக்கிறது.
புதின்
புதின்
ட்விட்டர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வேறு சில சர்வதேச ஊடகங்களும் இது குறித்த தகவல்களை வெளியிட்டிருக்கின்றன. அதில், ``புதினின் கை கால்கள் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு நடுங்கிக்கொண்டிருக்கின்றன. கடும் தலைவலியால் அவதிப்பட்டுவருகிறார். அவர் டி.வி-யில் தோன்றும்போது, என்ன பேச வேண்டும் என்பதை பேப்பர்களில் பெரிய எழுத்துகளில் அச்சடித்துக் கொடுக்கிறார்கள். ஒரு பேப்பரில் இரண்டு வரிகள் மட்டுமே எழுதப்படுகின்றன. அந்த அளவுக்கு புதினின் கண் பார்வை நாளுக்கு நாள் மோசமடைந்துவருகிறது'' என்று ரஷ்ய உளவாளி ஒருவர் கூறியதாகச் செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் குறித்து அடிக்கடி வதந்திகள் வருவதுண்டு. அதேபோல சமீபகாலமாக ரஷ்ய அதிபர் புதினின் உடல்நிலை குறித்தும் பல்வேறு தகவல்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. சில நாள்களுக்கு முன்பாக, அவருக்கு வயிற்றுப் பகுதியில் ஓர் அறுவை சிகிச்சை நடந்ததாகக்கூடச் செய்திகள் வெளியாகியிருந்தன. இந்த நிலையில்தான், `புதின் மூன்று ஆண்டுகள் மட்டுமே உயிர் வாழ்வார்' என்ற அதிர்ச்சி செய்தி வெளியாகியிருக்கிறது. ஆனால், இந்தத் தகவல்களை முற்றிலுமாக மறுத்திருக்கிறது ரஷ்ய அரசு.

ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், ``அக்டோபர் மாதத்தில் 70 வயதை நிறைவு செய்யவிருக்கும் புதின், தினசரி பொதுவெளியில் தோன்றுகிறார். நீங்கள் டி.வி-யில் அவரைப் பார்க்க முடியும். அவர் பேச்சைக் கேட்க முடியும். இவ்வளவு சுறுசுறுப்பாகச் செயல்படும் இந்த மனிதரிடம் நோய் இருப்பதாகச் சிலர் எப்படித்தான் சொல்கிறார்களோ'' என்று சொல்லி இந்தத் தகவல்களை மறுத்திருக்கிறார்.

ரஷ்ய அதிபர் புதின்
ரஷ்ய அதிபர் புதின்

சர்வதேச அரசியலை உற்றுநோக்கும் சிலர் இந்த விவகாரம் குறித்துப் பேசுகையில், ``ரஷ்ய அதிபர் புதினின் உடல்நிலை குறித்து வெளியாகியிருக்கும் தகவல்கள் முற்றிலுமாக உண்மையாக இருக்க வாய்ப்பில்லை. ஆனால், அவருக்குப் புற்றுநோய் இருப்பதாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலுள்ள சில உளவு நிறுவனங்கள் உறுதிப்படுத்தியிருக்கின்றன. அதேநேரத்தில் தற்போது, அவரது உடல்நிலை குறித்து வெளியாகியிருக்கும் செய்திகளை ரஷ்யாவேகூட திட்டமிட்டுப் பரப்பியிருக்கலாம். ரஷ்யா, உக்ரைன்மீது போர் தொடுத்திருக்கும் இந்த நேரத்தில் இப்படியான செய்திகள் வெளியாகியிருப்பது சந்தேகங்களைக் கிளப்புகிறது. புதினின் போர்த் திட்டங்களின் ஓர் அங்கமாகக்கூட இந்த வதந்திகள் பரப்பப்படலாம்'' என்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism