Published:Updated:

``இந்தியத் தூதரகம் எனக்கு உதவவில்லை..." - உக்ரைனில் துப்பாக்கியால் சுடப்பட்ட மாணவர் பேட்டி!

மாணவர் ஹர்ஜோத் சிங் ( ட்விட்டர் )

`நான் லிவிவ் நகருக்குச் செல்ல உதவுங்கள் என்று கேட்டேன். ஆனால், யாரும் என்னைத் தொடர்புகொள்ளவில்லை. அதன் பின்பே கீவ் நகர மருத்துவமனைக்குச் சென்றேன்.' - ஹர்ஜோத் சிங்

``இந்தியத் தூதரகம் எனக்கு உதவவில்லை..." - உக்ரைனில் துப்பாக்கியால் சுடப்பட்ட மாணவர் பேட்டி!

`நான் லிவிவ் நகருக்குச் செல்ல உதவுங்கள் என்று கேட்டேன். ஆனால், யாரும் என்னைத் தொடர்புகொள்ளவில்லை. அதன் பின்பே கீவ் நகர மருத்துவமனைக்குச் சென்றேன்.' - ஹர்ஜோத் சிங்

Published:Updated:
மாணவர் ஹர்ஜோத் சிங் ( ட்விட்டர் )

உக்ரைன்-ரஷ்யா இடையேயான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. உக்ரைனைவிட்டு பொதுமக்கள் தப்பி அகதிகளாக அண்டை நாடுகளுக்குப் புலம்பெயர்ந்துகொண்டிருக்கின்றனர்.

உக்ரைனுக்கு மருத்துவம் பயிலச் சென்ற இந்திய மாணவர்களும் அங்கு சிக்கியுள்ளனர். அவர்களை இந்திய அரசு `ஆபரேஷன் கங்கா' என்ற பெயரில் மீட்டுவருகிறது.

உக்ரைன்
உக்ரைன்

டெல்லியைச் சேர்ந்த ஹர்ஜோத் சிங் உக்ரைனில் மருத்துவம் பயின்றுவந்திருக்கிறார். போரின் தீவிரம் காரணமாக கீவிலிருந்து தப்பி லிவிவ் செல்ல முயன்றபோது அவர் சுடப்பட்டிருக்கிறார். இது தொடர்பாக அந்த மாணவர் பிரபல தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ``உக்ரைன் தலைநகர் கீவிலிருந்து தப்பிக்க நண்பனுடன் காரில் புறப்பட்டேன்.

அப்போது துப்பாக்கியால் சுடப்பட்டேன். அதனால் என் தோளில் தோட்டா பாய்ந்தது. என் காலிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது. அப்போது நான் இந்தியத் தூதரக அதிகாரிகளைத் தொடர்புகொண்டு, `என்னால் நடக்க முடியவில்லை...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உக்ரைன் ரஷ்யா போர்
உக்ரைன் ரஷ்யா போர்
Alexander Zemlianichenko Jr

நான் லிவிவ் நகருக்குச் செல்ல உதவுங்கள்’ என்று கேட்டேன். ஆனால், யாரும் என்னைத் தொடர்புகொள்ளவில்லை. அதன் பின்பே கீவ் நகர மருத்துவமனைக்குச் சென்றேன். இங்கு இன்னும் பலர் வீடுகளுக்குள்ளே பயத்தில் முடங்கிக்கிடக்கிறார்கள். இப்போது உலகுக்கு இங்கு என்ன நடக்கிறது எனத் தெரியும்" என்று தெரிவித்துள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism