Published:Updated:

`சீன மருத்துவர் மூலம் பரவிய கொரோனா?' - மறுக்கும் தென்கொரியா; விலகாத கிம் உடல்நிலை மர்மம்

கிம் ஜாங்
கிம் ஜாங்

2011-ம் ஆண்டு தனது தந்தை மரணமடைந்த பின்னர், கிம் ஜாங் உன் பதவிக்கு வந்தார். அதற்கு முன்னதாகவே கிம் ஜாங் உன், அரசியல் வாரிசாக அறியப்பட்டிருக்கிறார்.

உலகின் பெரும்பாலான நாடுகள் கொரோனா தடுப்பு விஷயத்தில் கவனம் செலுத்திக்கொண்டிருக்க, கடந்த 10 நாள்களாக வடகொரிய அதிபர் எந்த நிகழ்விலும் ஆஜராகவில்லை. வடகொரியாவில் கொரோனா வைரஸால் ஒருவர்கூட பாதிக்கப்படவில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்தாலும் அதில் உண்மையில்லை எனப் பல்வேறு நாடுகள் கருத்து தெரிவித்துள்ளன. வடகொரியாவில் ஊடகங்கள் சுதந்திரமாகச் செயல்பட முடியாது. வடகொரியாவே எதாவது தகவலைச் சொன்னால்தான் உண்டு. இதனால் அந்த நாட்டில் நடக்கும் விஷயங்கள் மற்ற நாடுகளில், பெரும்பாலும் யூகங்களாகத்தான் பேசப்படும்.

கிம் ஜாங்
கிம் ஜாங்

இந்தநிலையில், இன்று உலகம் முழுவதும் ஒரு தகவல் பரவியது. அதாவது, வடகொரியாவின் அதிக சக்தி படைத்த தலைவராக அறியப்படும் கிம் ஜாங் உன், உடல்நலக் குறைவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என்றாலும், அவரது உடல்நிலையில் சரியான முன்னேற்றம் இல்லை என்ற தகவல் வெளியானது. புகைப்பழக்கமும் அதிக உடல் எடையும் இதற்குக் காரணமாகச் சொல்லப்பட்டது.

அமெரிக்காவின் உளவுத்துறையும் இதுதொடர்பாக தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அவர்களும் இந்தத் தகவலை உறுதிசெய்ததாகவும் தகவல் பரவியது. இதயக் கோளாறு காரணமாக அவருக்கு அறுவை சிகிச்சை நடந்ததாகவும், கடந்த 11-ம் தேதிக்குப் பிறகு கிம் மக்கள் முன் தோன்றவில்லை என்றும் கொரோனா தொற்று அச்சத்தால்தான் அவர் மறைந்திருக்கிறார் என்றும் பேசப்பட்டது.

வடகொரியாவை நிறுவியவரும் கிம்மின் தாத்தாவுமான கிம் இல் சங்கின் பிறந்தநாள், ஏப்ரல் 15 அன்று தேசிய விழாவாகக் கொண்டாடப்பட்டது. ஆண்டுதோறும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும் இந்த விழாவில், இந்த ஆண்டு கிம் கலந்துகொள்ளவில்லை.

கிம் ஜாங் உன்
கிம் ஜாங் உன்

ஏவுகணை லாஞ்ச், எப்போதும் கிம்மின் கண்காணிப்பிலேயே நடத்தப்படும். ஆனால், இந்தமுறை கிம் இதில் கலந்துகொள்ளவில்லை. இதுபோன்ற சந்தேகங்கள் அவருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்பியது. எனினும் அவருக்குக் கொரோனா தொற்று இல்லை என்றும் இதயப் பிரச்னையால் சிரமப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் அமெரிக்காவின் `ஒன் அமெரிக்கா நியூஸ்’ என்ற ஊடகத்தின் செய்தியாளர் ஜேக், ``வடகொரிய அதிபரின் இதய வால்வு பிரச்னைக்கு சிகிச்சை அளிக்க வந்த சீன மருத்துவர் மூலம், கிம்-க்குக் கொரோனா தொற்று ஏற்பட்டது. எனினும் தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது” என்றார். இவரின் இந்தத் தகவலை வட கொரிய அதிகாரிகள் யாரும் மறுக்கவும் இல்லை, ஏற்கவும் இல்லை.

கிம்
கிம்

இந்த நிலையில் தென் கொரிய நாட்டின் அதிகாரிகள், கிம் குறித்து பரவும் தகவல்கள் தவறானவை எனத் தெரிவித்துள்ளனர். ``வடகொரியா அதிபர் குறித்து வெளியாகும் தகவல்கள் உண்மை என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை” என மறுத்துள்ள தென் கொரியா அதிகாரிகள், வட கொரியாவில் தற்போது மோசமான நிலை எதுவும் தென்படவில்லை என்கின்றனர். சீனாவும் வடகொரியா அதிபர் தொடர்பான தகவல்களை மறுத்துள்ளது.

பொதுவாக, வடகொரியா மக்களுக்குத் தலைவர்களின் உடல்நிலை குறித்த தகவல்கள் வழங்கப்படமாட்டாது. இதனால் வடகொரியா தரப்பிலிருந்து எந்த விளக்கமும் வெளியாகவில்லை. கிம், திடீரெனக் காணாமல் போவது இது ஒன்றும் முதல்முறை அல்ல. இதற்கு முன்னதாக, 2014 -ம் ஆண்டு, கிட்டத்தட்ட 40 நாள்கள் யார் கண்ணிலும்படாமல் இருந்தார். அப்போதும் அவரது உடல்நிலை குறித்து சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. ஆனால் மீண்டும் வந்தார். அப்போது தன் மீது பரப்பப்பட்ட தகவல்கள் குறித்து எதுவும் பேசவில்லை.

`சீன மருத்துவர் மூலம் பரவிய கொரோனா?' - மறுக்கும் தென்கொரியா; விலகாத கிம் உடல்நிலை மர்மம்

2011 -ம் ஆண்டு தனது தந்தை மரணமடைந்த பின்னர், கிம் ஜாங் உன் பதவிக்கு வந்தார். அதற்கு முன்னதாகவே கிம் ஜாங் உன் தான் அரசியல் வாரிசாக அறியப்பட்டிருக்கிறார். ஆனால் கிம் ஜாங் உன்னுக்குப் பிறகு யார் என்பதைச் சரியாகக் கணிக்க முடியாதபடி உள்ளதாகக் கூறப்படுகிறது.

இருதய நோய்... தனி வில்லாவில் ட்ரீட்மென்ட்... ஆபத்தான நிலையில் கிம் ஜாங் உன்னின் உடல்நிலை?!

எனினும் சகோதரனுடன் எப்போதும் பின்னணில் இருக்கும் அவரது சகோதரியான கிம் யோ ஜாங் தான் அடுத்து பதவிக்கு வருவார் எனச் சொல்லப்படுகிறது. கிம்முக்கு அடுத்து, அந்தக் குடும்பத்தில் அதிகம் அறியப்படுபவராக அவர்தான் இருக்கிறார். சிலர் இவரை வட கொரியாவின் இவாங்கா ட்ரம்ப் என்று அழைக்கும் அளவுக்குப் பிரபலம். எனினும் தற்போதைய நிலையில் வடகொரியாவில் கிம்மின் உடல்நிலையைப் பொறுத்துதான் அரசியல் மாற்றங்களுக்கான வாய்ப்புகளை ஆராய முடியும் என்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு