Published:Updated:

``டை அணிவதைத் தவிருங்கள்; மின்சாரத்தைச் சேமியுங்கள்..!" - ஸ்பெயின் பிரதமர் சொல்வதென்ன?

ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் ( ட்விட்டர் )

``அரசு அதிகாரிகள் மற்றும் தனியார்துறையில் பணிபுரிபவர்கள் டை அணிவதைக் கைவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். தேவையில்லையென்றால், டை பயன்படுத்த வேண்டாம்." - ஸ்பெயின் பிரதமர்

``டை அணிவதைத் தவிருங்கள்; மின்சாரத்தைச் சேமியுங்கள்..!" - ஸ்பெயின் பிரதமர் சொல்வதென்ன?

``அரசு அதிகாரிகள் மற்றும் தனியார்துறையில் பணிபுரிபவர்கள் டை அணிவதைக் கைவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். தேவையில்லையென்றால், டை பயன்படுத்த வேண்டாம்." - ஸ்பெயின் பிரதமர்

Published:Updated:
ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் ( ட்விட்டர் )

ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், ஸ்பெயின் அரசின் வருடாந்தர செயல்திறனை விளக்கும், செய்தியாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு, நாட்டின் வளர்ச்சி, தேவை என அனைத்தையும் நாட்டு மக்களுக்கு விளக்கினார். அப்போது அவர் டை அணியாமல், வெள்ளைச் சட்டை, நீல நிற கோட் அணிந்திருந்தார். அப்போது பேசிய அவர், ``நான் டை அணியவில்லை என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்... விரும்புகிறேன். மின்சார சேமிப்பு என்பது தற்போது மிக அவசியமானதாக மாறியிருக்கிறது. எனவே, அரசு அதிகாரிகள் மற்றும் தனியார்துறையில் பணிபுரிபவர்கள் டை அணிவதைக் கைவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். தேவையில்லை என்றால், டை பயன்படுத்த வேண்டாம். தற்போது நான் குறைந்த ஆடைகளையே அணிகிறேன். நாட்டின் வெப்பநிலை அதிகமாகிக்கொண்டே செல்கிறது. இதனால் இறுக்கமான ஆடைகளைத் தவிருங்கள்.

ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ்
ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ்
ட்விட்டர்

அதனால் (ஏசி போன்ற) அவசியமற்ற மின்சார உபயோகத்திலிருந்து நமது நாட்டின் ஆற்றலைச் சேமிக்க முடியும். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும் இந்தத் திட்டம் பயன்படும்" என்றார். உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்புக்குப் பிறகு, ஸ்பெயினில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின்சாரச் செலவுகள் அதிகரித்திருப்பது அங்கு முக்கியப் பிரச்னையாக மாறியிருக்கிறது. அதேநேரம், ஸ்பெயின் வெப்பநிலை ஒரு மாதத்துக்கும் மேலாக 40 டிகிரி செல்சியஸை (104 டிகிரி பாரன்ஹீட்) தாண்டியிருக்கிறது. அதனால் இறுக்கமான ஆடைகளை அதிகம் பயன்படுத்தாமல் மின்சாரச் செலவைக் குறைக்குமாறு அரசு மக்களை வலியுறுத்தியிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!