Published:Updated:

`இங்கிலாந்து எம்.பி-க்கள் ஜீன்ஸ், டி-சர்ட் அணிந்து நாடாளுமன்றத்துக்குள் வரத் தடை!' - ஏன் தெரியுமா?

லிண்ட்சே ஹோய்ல்
லிண்ட்சே ஹோய்ல் ( UK parliament official website )

``இனி எம்.பி.க்கள் ஜீன்ஸ், டி-சர்ட், ஸ்லீவ்லெஸ் அணிந்து நாடாளுமன்றத்துக்கு வரக்கூடாது" என பிரிட்டன் நாடாளுமன்ற சபாநாயகர் லிண்ட்சே ஹோய்ல் (Sir Lindsay Hoyle) அதிரடி தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

``இனி எம்.பி.க்கள் ஜீன்ஸ், டி-சர்ட், ஸ்லீவ்லெஸ் அணிந்து நாடாளுமன்றத்துக்கு வரக்கூடாது" என பிரிட்டன் நாடாளுமன்ற சபாநாயகர் லிண்ட்சே ஹோய்ல் (Sir Lindsay Hoyle) அதிரடித் தடை உத்தரவு பிறப்பித்துள்ளார். கோடை விடுமுறை முடிந்துள்ள நிலையில், அடுத்தவாரம் மீண்டும் நாடாளுமன்றக் கூட்டம் தொடங்கவுள்ளது. சபாநாயகரின் இந்த அறிவிப்பு எம்.பி-க்களை புருவம் உயர்த்தச் செய்துள்ளது.

யாருடைய அடிமை பிரிட்டன் அரச குடும்பம்? | Royal family Issue Explained | Jenifer Explains
பிரிட்டன் நாடாளுமன்றத்துக்கு ஜீன்ஸ், டி-சர்ட் அணிந்துவர தடை
பிரிட்டன் நாடாளுமன்றத்துக்கு ஜீன்ஸ், டி-சர்ட் அணிந்துவர தடை

புதிய அறிவிப்பு குறித்து பேசிய லிண்ட்சே ஹோய்ல், ``நாடாளுமன்றத்துக்கு வரும் எம்.பி-க்களின் ஆடைகள், அவர்களின் தொகுதி மீது வைத்திருக்கும் மரியாதையை வெளிப்படுத்தும் வகையில் இருக்க வேண்டும்! ஜீன்ஸ், டி-சர்ட், ஸ்போர்ட்ஸ் உடைகள், ஸ்லீவ்லெஸ் டாப்ஸ் போன்ற மாடர்ன் உடைகள் அணிந்து வருவதைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும். அனைவரும், தொழில்முறை (Business attire) ஆடைகளையே இனி அணிந்து வரவேண்டும்" என கண்டிப்புடன் உத்தவிட்டுள்ளார்.

சபாநாயகர் லிண்ட்சேவின் இந்த திடீர் உத்தவுக்கு ஒரு காரணமும் இருக்கிறது. கொரோனா பரவலுக்கு முன்பாக கடந்த ஆண்டு 2020 டிசம்பர் மாதம் கூடிய பிரிட்டன் நாடாளுமன்றக்கூட்டத்துக்கு, லேபர் கட்சியைச் சேர்ந்த டிரேசி பிராபின் (Tracy Brabin) என்ற ஒரு பெண் எம்.பி. மாடர்ன் உடை அணிந்து வந்தார். விவாத நேரத்தின்போது, தோள்பட்டையிலிருந்து அவரது ஆடை விலகியது. இந்த சம்பவம் சர்வதேச அளவில் சர்ச்சையைக் கிளப்பியது. இதனால் டிரேசி பிராபின் தனது எம்.பி. பதவியையே ராஜினாமா செய்தார்.

டிரேசி பிராபின்
டிரேசி பிராபின்
Twitter

இந்த சம்பவத்தின் அடிப்படையிலே, சபாநாயகர் லிண்ட்சே நாடாளுமன்ற ட்ரெஸ்கோட் குறித்து இப்படியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார் எனச் சொல்லப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு