Published:Updated:

பாகிஸ்தான்: இம்ரான் கானை உளவு பார்க்க திட்டம்... படுக்கை அறையில் கருவியை பொருத்த முயற்சி!

இம்ரான் கான்

இம்ரான் கான் வீட்டில் பணிபுரிந்த ஊழியர் ஒருவர் இம்ரான் கான் அறையில் உளவு பார்க்கும் கருவியை பொருத்த முயன்றதாக தகவல் வெளியாகி இருக்கிறது .

பாகிஸ்தான்: இம்ரான் கானை உளவு பார்க்க திட்டம்... படுக்கை அறையில் கருவியை பொருத்த முயற்சி!

இம்ரான் கான் வீட்டில் பணிபுரிந்த ஊழியர் ஒருவர் இம்ரான் கான் அறையில் உளவு பார்க்கும் கருவியை பொருத்த முயன்றதாக தகவல் வெளியாகி இருக்கிறது .

Published:Updated:
இம்ரான் கான்

பாகிஸ்தானில் நிலவிவரும் கடுமையான பொருளாதார சூழ்நிலை காரணமாக இம்ரான் கான் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகு ஷெபாஸ் ஷெரீப் புதிய பிரதமராக பதவியேற்றுக்கொண்டார்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், ``என்னைக் கொல்ல சதித் திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது. என்னைக் கொல்ல சதித் திட்டம் தீட்டியவர்கள் யார் என்பது எனக்குத் தெரியும். நான் ஒரு வீடியோவைப் பதிவு செய்திருக்கிறேன். அந்த வீடியோவில் நான் அனைவரின் பெயரையும் குறிப்பிட்டிருக்கிறேன். நான் கொல்லப்பட்டால், அந்த வீடியோ பகிரங்கமாக வெளியிடப்படும்'' என்று அண்மையில் கூறியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதே போல, உளவுத்துறை அமைப்பு, பாகிஸ்தான் பயங்கரவாத தடுப்பு பிரிவு உள்ளிட்ட அமைப்புகளும் இம்ரான் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தகவல் தெரிவித்திருந்தன.

இம்ரான் கான்
இம்ரான் கான்

இந்த நிலையில், இம்ரான் கான் வீட்டில் பணிபுரிந்த ஊழியர் ஒருவர் இம்ரான் கான் அறையில் உளவு பார்க்கும் கருவியை பொருத்த முயன்றதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

இது தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய இம்ரான் கான் கட்சியைச் சேர்ந்த ஷெபாஸ் கில் என்பவர், ``இம்ரான் கான் வீட்டில் பணிபுரிந்த ஊழியர் ஒருவர் அவரது அறையில் உளவு பார்க்கும் கருவியை பொருத்த முயன்றார். இந்தச் செயல் கொடூரமானது, துரதிஷ்டவசமானது. இதை பார்த்த மற்றொரு ஊழியர் உடனடியாக பாதுகாப்புக் குழுவிடம் இது குறித்து தெரிவித்திருக்கிறார். அவர்கள் இது தொடர்பாக நடவடிக்கை எடுத்ததால், அந்த உளவு முயற்சி முறியடிக்கப்பட்டது. அந்த நபர் உடனடியாக பாகிஸ்தான் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார்" என்றார்.

பாகிஸ்தான் காவல்துறையினர் இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவுசெய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இம்ரானின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!