Published:Updated:

`இலங்கையைக் காப்பாற்ற வேண்டும்; முடிந்தவரை உதவுங்கள்!' - எதிர்க்கட்சித் தலைவர் மோடியிடம் வேண்டுகோள்

இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் ( ட்விட்டர் )

தங்களால் முடிந்தவரை இலங்கைக்கு உதவுங்கள் என இந்திய பிரதமரிடம் இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா கோரிக்கை விடுதிருப்பதாகக் கூறப்படுகிறது.

இலங்கையில் கடந்த சில வாரமாக கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. அதனால் அத்தியாவசியப் பொருள்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இலங்கை அரசுக்கு எதிராக எதிர்க்கட்சியினர், மக்கள் தெருவில் இறங்கிப் போராடி வருகிறார்கள். இலங்கையில் நிலவி வரும், அசாதாரண சூழலில், பிரதமர் மகிந்த ராஜபக்சே, அதிபர் கோத்தபய ராஜபக்சே இருவரையும் தவிர்த்து அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்துள்ளனர். இந்த நிலையில், அனைத்துக் கட்சி அமைச்சரவையை அமைக்க அதிபர் கோத்தபய ராஜபக்சே நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். இலங்கையின் பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு சீனாவும், இந்தியாவும் உதவி வருகின்றன.

மோடி
மோடி

இந்த நிலையில், இலங்கையின் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு இந்தியா உதவ வேண்டும் என்று அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா கோரிக்கை விடுத்திருக்கிறார். இது தொடர்பாக அவர், ``இந்தியப் பிரதமர் மோடி தயவுசெய்து இலங்கைக்கு முடிந்தவரை உதவ வேண்டும். இது எங்கள் தாய்நாடு, எங்கள் தாய்நாட்டை நாங்கள் காப்பாற்ற வேண்டும்" என்று மோடிக்குக் கோரிக்கை விடுத்ததாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்திருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism