Published:Updated:

இலங்கை: தினமும் 10 மணி நேர மின்வெட்டு... இரண்டு நாள்களுக்கு டீசல் இல்லை - அதிர்ச்சியில் மக்கள்!

இலங்கை ( ட்விட்டர் )

இலங்கையில் இரண்டு நாட்களுக்கு டீசல் இல்லை என பெட்ரோலிய கூட்டமைப்பின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்திருக்கிறார்.

இலங்கை: தினமும் 10 மணி நேர மின்வெட்டு... இரண்டு நாள்களுக்கு டீசல் இல்லை - அதிர்ச்சியில் மக்கள்!

இலங்கையில் இரண்டு நாட்களுக்கு டீசல் இல்லை என பெட்ரோலிய கூட்டமைப்பின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:
இலங்கை ( ட்விட்டர் )

இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டு மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும், பெட்ரோல், டீசல் விலையும் உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் இலங்கை அரசைக் கண்டித்து, வீதிகளில் இறங்கி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

பெட்ரோலிய கூட்டமைப்பு தலைவர் சுமித் விஜேசிங்க இது தொடர்பாகக் கூறியிருப்பதாவது, ''கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட 37,500 மெட்ரிக் டன் டீசலை தரையிறக்க முடியவில்லை. சிபேட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இன்றும், நாளையும் டீசலை பெற முடியாது. அத்தியாவசிய தேவைகளுக்கான டீசல் கையிருப்பில் உள்ளது. தட்டுப்பாடின்றி பெட்ரோல் விநியோகம் செய்யப்படும்” எனக் கூறியிருக்கிறார்.

இலங்கை
இலங்கை
Eranga Jayawardena

இந்நிலையில் எரிபொருள் பற்றாக்குறைக் காரணமாக, மின்வெட்டு நேரத்தை அதிகரிக்க மின்சாரத்துறை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக கூறப்படுகிறாது. இதன்காரணமாக, மின்வெட்டு 10 மணி நேரமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. அனல் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான எரிபொருள் கிடைக்காததால் 750 மெகாவோல்ட் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதனால் தொழில்கள், விவசாயம் சார்ந்த பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism