Published:Updated:

இலங்கை: கப்பலில் தப்பிச் சென்ற கோத்தபய ராஜபக்சே?! - அதிபர் மாளிகையில் இருந்த அதிபர் கொடி அகற்றம்

இலங்கை

இலங்கை தலைநகர் கொழும்புவில் மிகப்பெரிய போராட்டம் வெடித்துள்ள நிலையில், கோத்தபய ராஜபக்சே கப்பல் மூலமாகத் தப்பி ஓடும் காட்சிகளும் வெளியாகியிருப்பதாகக் கூறப்படுகிறது.

இலங்கை, வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி நிலையில் சிக்கித் தவித்துவருகிறது. அத்தியாவசியப் பொருள்களுக்குக்கூட இலங்கையில் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. மக்கள் நிம்மதியைத் தொலைத்து ஒவ்வொரு நாளும் இன்னல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், இலங்கை, கொழும்புவில் எதிர்க்கட்சிகள், விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் எனப் பலர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராகப் போராட்டம் நடத்திவருகின்றனர். இதைக் கட்டுப்படுத்த இலங்கையில் பல்வேறு இடங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. எனினும், அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கூட்டம் கூட்டமாகக் கடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை
இலங்கை
ட்விட்டர்

மேலும், இலங்கை அதிபருக்கு எதிராக அதிபர் மாளிகைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த சொகுசு கார்களில் ஏறி வலம்வந்தனர். அதே சமயத்தில், கோத்தபய ராஜபக்சே கப்பல் மூலமாகத் தப்பி ஓடும் காட்சிகளும் வெளியாகியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. மேலும் அதிபர் மாளிகைக்குள் இருந்த நீச்சல் குளத்திலும் போராட்டக்காரர்கள் குளிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

கொழும்பிலுள்ள அதிபர் மாளிகையில் அதிபர் கொடி அகற்றப்பட்டு இலங்கைக் கொடி ஏற்றப்பட்டிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!