Published:Updated:

``இலங்கையில் அனைத்துக் கட்சி அமைச்சரவை..!" - அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவிப்பு

மகிந்த ராஜபக்சே - கோத்தபய ராஜபக்சே

அதிபர், 26 அமைச்சர்களின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டு, புதிய அமைச்சரவை அமைக்க அழைப்பு விடுத்துள்ளார் - கோத்தபய ராஜபக்சே.

``இலங்கையில் அனைத்துக் கட்சி அமைச்சரவை..!" - அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவிப்பு

அதிபர், 26 அமைச்சர்களின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டு, புதிய அமைச்சரவை அமைக்க அழைப்பு விடுத்துள்ளார் - கோத்தபய ராஜபக்சே.

Published:Updated:
மகிந்த ராஜபக்சே - கோத்தபய ராஜபக்சே

இலங்கையில் கடந்த சில வாரங்களாகக் கடும் பொருளாதார நெருக்கடி நிலவிவருகிறது. அதனால் அத்தியாவசியப் பொருள்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இலங்கை அரசுக்கு எதிராக எதிர்க்கட்சியினர், மக்கள் தெருவில் இறங்கிப் போராடிவருகிறார்கள்.

மக்களின் கடும் கொந்தளிப்பால் ஊரடங்கும் போடப்பட்டு ராணுவம் தீவிர ரோந்துப் பணியில் உள்ளது. இந்த நிலையில், நேற்று நள்ளிரவு நடந்த இலங்கையின் அமைச்சரவை அவசர ஆலோசனைக் கூட்டத்தில் இலங்கை பொருளாதார நெருக்கடி குறித்து விவாதித்த பின்னர், அதிபர் கோத்தபய ராஜபக்சே, அவரின் சகோதரரும் பிரதமருமான மகிந்த ராஜபக்சேவைத் தவிர ஒட்டுமொத்தமாக 26 அமைச்சர்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்வதாக முடிவுசெய்யப்பட்டது.

அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராகப் போராட்டம்-இலங்கை
அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராகப் போராட்டம்-இலங்கை

எனவே, 26 அமைச்சர்களும் தங்கள் ராஜினாமா கடிதத்தை கோத்தபய ராஜபக்சேவிடம் அளித்தனர். கோத்தபய ராஜபக்சே ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டு, புதிய அமைச்சரவை அமைக்க அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசை அமைக்க அனைத்துக் கட்சி அமைச்சரவைக்கு இலங்கை தயாராகிவருகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism