Published:Updated:

பற்றி எரியும் இலங்கை... வன்முறையைக் கைவிடுமாறு மக்களுக்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே வேண்டுகோள்!

இலங்கை

பொருளாதார நெருக்கடி காரணமாக, இலங்கையில் மக்களின் போராட்டம் கலவரமாகிவரும் நிலையில், வன்முறையை கைவிட்டுவிட்டு அமைதிகாக்குமாறு, மக்களுக்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பற்றி எரியும் இலங்கை... வன்முறையைக் கைவிடுமாறு மக்களுக்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே வேண்டுகோள்!

பொருளாதார நெருக்கடி காரணமாக, இலங்கையில் மக்களின் போராட்டம் கலவரமாகிவரும் நிலையில், வன்முறையை கைவிட்டுவிட்டு அமைதிகாக்குமாறு, மக்களுக்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Published:Updated:
இலங்கை

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, பல வாரங்களாகவே இலங்கை அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். நாளுக்கு நாள் போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து, அரசியல் நெருக்கடியில் தனது பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்சே நேற்று ராஜினாமா செய்தார். இதையடுத்து, மகிந்த ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்திவந்த மக்கள் மீது தாக்குதல் நடத்தியதால், போராட்டக்களம் கலவரக்கலமாக மாறியது.

நேற்றிரவு மகிந்த ராஜபக்சேவின் பூர்வீக வீடு கலவரத்தில் தீக்கிரையாகியது. மேலும், பிரதமர் பதவியிலிருந்து விலகியதையடுத்து, பிரதமர் மாளிகையிலிருந்து வெளியேறிய மகிந்த ராஜபக்சே, வெளிநாட்டுக்கு தப்பிச்செல்லத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன. இதன் காரணமாக இலங்கை விமான நிலையங்களையெல்லாம், முற்றுகையிட்டு மக்கள் போராட்டம் நடத்திவருகின்றனர்.

கோத்தபய ராஜபக்சே
கோத்தபய ராஜபக்சே

இந்த நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே வன்முறையைக் கைவிடுமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து ட்வீட் செய்துள்ளார்.

``அரசியல் சார்புகளைப் பொருட்படுத்தாமல், குடிமக்களுக்கு எதிரான இந்த வன்முறை மற்றும் பழிவாங்கும் செயல்களை, நிறுத்திவிட்டு அமைதிகாக்குமாறு மக்களை நான் கேட்டுக்கொள்கிறேன். மேலும், பொருளாதார நெருக்கடியைத் தீர்க்கவும், ஒருமித்த கருத்து மூலம் அரசியல் ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்" என கோத்தபய ராஜபக்சே மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism