Published:Updated:

``இந்த வாரம் மக்களின் நம்பிக்கையைப் பெறக்கூடிய பிரதமரை நியமிப்பேன்" - அதிபர் கோத்தபய ராஜபக்சே

கோத்தபய ராஜபக்சே

``மக்களின் நம்பிக்கையைப் பெறக்கூடிய பிரதமரையும், அமைச்சரவையையும் இந்த வாரம் நியமிப்பேன்’’ என இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

``இந்த வாரம் மக்களின் நம்பிக்கையைப் பெறக்கூடிய பிரதமரை நியமிப்பேன்" - அதிபர் கோத்தபய ராஜபக்சே

``மக்களின் நம்பிக்கையைப் பெறக்கூடிய பிரதமரையும், அமைச்சரவையையும் இந்த வாரம் நியமிப்பேன்’’ என இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

Published:Updated:
கோத்தபய ராஜபக்சே

இலங்கையில் பல வாரங்களாக நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக, அரசுக்கெதிராக மக்கள் நடத்திவரும் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்துகொண்டேவருகிறது. நிலைமை மிகவும் மோசமடைந்ததையொட்டி, கடந்த திங்கள் கிழமையன்று மகிந்த ராஜபக்சே தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து போராட்ட கலவரத்தில், மகிந்த ராஜபக்சேவின் வீடு, அவர் சகோதரரின் வீடு, அரசு அதிகாரிகளின் வீடு எனப் பலவும் எரிந்து சாம்பலாகின. தற்போது ஊரடங்கு அமலிலுள்ள போதிலும், ராணுவம் மற்றும் காவல்துறைக்குக் கூடுதல் அதிகாரமாக, பொதுச்சொத்துகளைச் சேதப்படுத்துபவர்களைச் சுட்டுத்தள்ள அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கை போராட்டம்
இலங்கை போராட்டம்
AP

இந்த நிலையில், நேற்று மாலை இலங்கை மக்களிடம் உரையாற்றிய அதிபர் கோத்தபய ராஜபக்சே, ``தற்போதைய நிலைமையைக் கட்டுப்படுத்தவும், நாடு அராஜகத்தை நோக்கிச் செல்வதைத் தடுக்கவும், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெறக்கூடிய மற்றும் மக்களின் நம்பிக்கையைப் பெறக்கூடிய பிரதமரையும், அமைச்சரவையையும் இந்த வாரம் நியமிப்பேன். இதுமட்டுமல்லாமல், புதிய அரசாங்கத்தின் பிரதமருக்கு, புதிய திட்டத்தை உருவாக்கி இந்த நாட்டை முன்னேற்றுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும்" என்று கூறினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பி.நந்தலால் வீரசிங்கே - இலங்கை மத்திய வங்கி கவர்னர்
பி.நந்தலால் வீரசிங்கே - இலங்கை மத்திய வங்கி கவர்னர்

அதேசமயம் நேற்று மாலை செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை மத்திய வங்கியின் கவர்னர் பி.நந்தலால் வீரசிங்கே, ``இன்னும் இரண்டு நாள்களில் புதிய அரசாங்கம் அமையாவிட்டால், நாட்டின் மொத்தப் பொருளாதாரமும் சீர்குலைந்துவிடும். அதுமட்டுமல்லாமல், இரண்டு வாரங்களுக்குள் அரசியல் கட்சிகள் தங்கள் பெரும்பான்மையை நிரூபிக்காவிட்டால், நான் எனது கவர்னர் பதவியிலிருந்து விலகிவிடுவேன். தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு, அரசியல் தீர்வுகள் எதுவும் இல்லாமல் நாட்டின் பொருளாதாரத்தை மீட்பதற்காக மத்திய வங்கி மேற்கொள்ளும் முயற்சிகள் எதுவும் வெற்றியடையாது" எனக் கூறினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism