இலங்கையில் சுதந்திரத்துக்குப் பிறகு ஏற்பட்டிருக்கிற வரலாறு காணாத விலைவாசி உயர்வு, உணவு, எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் பற்றாக்குறை ஆகியவற்றால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியிருக்கின்றனர்.
கொழும்பில் சனிக்கிழமை இலங்கை அதிபர் மாளிகை முன் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள், அதிபர் கோத்தபய ராகபக்சே வீட்டிற்குள் நுழைந்தனர். அங்கு போராட்டக்காரர்கள் வீட்டிலிருந்த பொருள்களையெல்லாம் அடித்து நொறுக்கினார்கள். போராட்டக்காரர்கள் வருவதற்குள் அதிபர் தன் குடும்பத்துடன் கப்பலில் தப்பிச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது பதவியை வரும் புதன்கிழமை ராஜினாமா செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதிபர் கோத்தபய ராஜபக்சே தன்னுடைய ராஜினாமா குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் அதிகாரபூர்வமாக தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், ``முன்பு அறிவித்தபடி வரும் ஜூலை 13-ம் தேதி அதிபர் பதவியிலிருந்து கோத்தபய ராஜபக்சே விலகுவார்!" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
