Published:Updated:

இலங்கை: மாலத்தீவுக்குத் தப்பி ஓடிய அதிபர் கோத்தபய ராஜபக்சே?! - இன்று ராஜினாமா எனத் தகவல்

அதிபர் கோத்தபய ராஜபக்சே

அதிபர் கோத்தபய ராஜபக்சே தன் மனைவி மற்றும் பாதுகாவலர்களுடன் மாலதீவுக்குத் தப்பிச் சென்றுவிட்டார் என இலங்கை குடியேற்ற அதிகாரி தெரிவித்ததாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இலங்கை: மாலத்தீவுக்குத் தப்பி ஓடிய அதிபர் கோத்தபய ராஜபக்சே?! - இன்று ராஜினாமா எனத் தகவல்

அதிபர் கோத்தபய ராஜபக்சே தன் மனைவி மற்றும் பாதுகாவலர்களுடன் மாலதீவுக்குத் தப்பிச் சென்றுவிட்டார் என இலங்கை குடியேற்ற அதிகாரி தெரிவித்ததாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

Published:Updated:
அதிபர் கோத்தபய ராஜபக்சே

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, அரசுக்கெதிராக பொதுமக்கள் போராட்டத்தில் களமிறங்கியுள்ளனர். பல மாதங்களாக நீடித்துவரும் இந்தப் போராட்டத்தில், ஏற்கெனவே மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியிலிருந்து விலகி, புதிய பிரதமராக ரணில் பதவியேற்றிருந்த நிலையில், தற்போது அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராகவும், பிரதமர் ரணிலுக்கு எதிராகவும் போராட்டக்காரர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

இலங்கை
இலங்கை

கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு அதிபர் மாளிகைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள், கண்ணில் படுவதையெல்லாம் சேதப்படுத்தினர். இதற்கிடையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே கடல் வழியாகக் கப்பலில் வெளிநாட்டுக்குத் தப்பிவிட்டதாகச் செய்திகள் வெளியாகின. பின்னர் இது போன்ற செய்திகள் உண்மையல்ல, கோத்தபய ராஜபக்சே இலங்கையில்தான் இருக்கிறார் என சபாநாயகர் மகிந்த யாப்பா தெரிவித்தார். மேலும், ஜூலை 13-ல் (இன்று) அதிபர் பதவியை கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்வார் எனவும் அறிவித்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கோத்தபய ராஜபக்சே
கோத்தபய ராஜபக்சே

இந்த நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே தன் மனைவி மற்றும் பாதுகாவலர்களுடன் மாலதீவுக்குத் தப்பிச்சென்றுவிட்டார் என இலங்கை குடியேற்ற அதிகாரி தெரிவித்ததாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. மேலும், மாலத்தீவின் மாலே நகரில் அவர் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இது ஒருபுறமிருக்க, அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது ராஜினாமா கடிதத்தில் கையெழுத்திட்டிருப்பதாகவும், இன்று அது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் செய்திகள் வெளியாகின்றன.